மூலதனப் பாதுகாப்பு நிதி என்றால் என்ன?

ஒரு மூலதனப் பாதுகாப்பு நிதி என்பது முதலீட்டாளர்களின் மூலதனத்தைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் ஒரு வகையான மியூச்சுவல் ஃபண்ட். மூலதனத்தைப் பாதுகாக்கும் அதே நேரம், இந்த நிதிகள் ஓரளவு வருவாய்களை அளிக்கும் திறன் கொண்டவை.

மியூச்சுவல் ஃபண்ட்கள், அதன் இயல்பிலேயே போர்ட்ஃபோலியோ பல்வகைப்படுத்தல் மற்றும் ஒரு சில பிற நன்மைகளையும் கொண்டிருப்பதால்பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கான மிக சிறந்த வழிகளில் ஒன்று என பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இது உண்மையாக இருந்தாலும், மோசமான சந்தை சூழல்கள் மற்றும் பிற பல காரணிகளால் உங்கள் மூலதனம் அதன் மதிப்பை இழப்பதற்கான அபாயம் எப்போதும் உள்ளது.இங்கு தான் மூலதனப் பாதுகாப்பு நிதி உதவுகிறது. அது என்ன மற்றும் அதில் ஏன் நான் முதலீடு செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களா? அறிந்து கொள்ள மேலும் படியுங்கள்.

ஒரு மூலதனப் பாதுகாப்பு நிதி என்றால் என்ன?

ஒரு மூலதனப் பாதுகாப்பு நிதிஎன்பது அதிக வருவாய்களை விட மூலதனத்தைப் பாதுகாப்பது மீது கவனம் செலுத்துகிற ஒரு வகையான மியூச்சுவல் ஃபண்ட். இது பாரம்பரிய மியூச்சுவல் ஃபண்ட் போல் இல்லாமல், மூலதன மதிப்பை அதிகரிப்பதன் வாயிலாக சந்தை அளிக்கும் வருவாய்களை விட அதிக வருவாய் தருவதை நோக்கமாக கொண்டுள்ளது.

மூலதனப் பாதுகாப்பு நிதிகளின் முக்கிய பண்புகளில் ஒன்று அதன் கட்டமைக்கப்பட்ட முதலீட்டு அணுகுமுறை. நிதிகள், கடன் மற்றும் ஈக்குவிட்டி முதலீடுகளின் கலவையில் முதலீடு செய்யப்படுகிறது. இதில் முதலீட்டாளரின் மூலதனத்தின் பெரும்பாலான பகுதி நிலையான-வருமானம் மற்றும் கடன் பத்திரங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. தொகையில் மீதமுள்ளவை ஈக்குவிட்டி பிரிவில் முதலீடு செய்யப்படுகிறது.

நிதியின் நிலையான வருமானம் மற்றும் கடன் கூறு மோசமான சந்தை சூழல்களிலும் முதலீட்டாளர்களின் மூலதனம் பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதி செய்கிறது. இங்கு நிதியின் ஈக்குவிட்டி கூறு ஓரளவு வருவாய் அளிக்க முயற்சிக்கிறது.

மேலும், மூலதனப் பாதுகாப்பு நிதிகள் என்பது குளோஸ்ட்-எண்ட் நிதிகள் எனப்படுகிறது, இதன் பொருள் அவற்றுக்கு ஒரு குறிப்பிட்ட முதிர்வு தேதி உள்ளது என்பதே. முதலீட்டாளர்கள் அந்த முதிர்வு தேதிக்கு முன் தங்கள் முதலீடுகளைத் திரும்ப பெற முடியாது. நிதியின் வகையைப் பொறுத்து, முதிர்வு தேதி 1-5 வருடங்களுக்குள் இருக்கும்.

மூலதனப் பாதுகாப்பு நிதிகள் எந்தச் சொத்துக்களில் முதலீடு செய்யப்படுகிறது?

இப்போது உங்களுக்கு மூலதனப் பாதுகாப்பு நிதிகளின் பொருள் பற்றி தெரிந்திருக்கும். வாருங்கள் அவை முதலீடு செய்யும் சொத்துக்களின் வகைகள் பற்றி பார்ப்போம்.

  • கடன் பத்திரங்கள் 

மூலதனப் பாதுகாப்பு நிதிகள் தங்கள் மூலதனத்தின் பெரும்பாலான பகுதியை நிலையான-வருமானம் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்து மூலதன பாதுகாப்பை உறுதி செய்கிறது. கடன் பத்திரங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் சதவீதம் நீங்கள் முதலீடு செய்யும் நிதியைப் பொறுத்து மாறுபடலாம். பெரும்பாலான நிதிகள் அவற்றின் 80% முதல் 90% தொகையை கடனுக்கு ஒதுக்குகின்றன.

பெரும்பாலான மூலதனப் பாதுகாப்பு நிதிகள் குறைந்த ஆபத்து, நிலையான வருமானம் அளிக்கும் பத்திரங்களான கருவூல பத்திரங்கள், அரசு பத்திரங்கள் மற்றும் AAA-மதிப்பிடப்பட்ட நிறுவன பத்திரங்கள். இந்தப் பத்திரங்கள் நிதிக்கு நிலைத்தன்மையை அளித்து முதலீடப்பட்ட மூலதனத்தின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

  • ஈக்குவிட்டி

நிதியில் மீதமுள்ள தொகை, 10% முதல் 20% வரை, ஈக்குவிட்டி பிரிவில் முதலீடு செய்யப்படுகிறது. ஈக்குவிட்டி பிரிவிற்கு நிதி ஒதுக்கப்படுவது நிதி மேலாளரின் முடிவு. அதன் பொருள் மேலாளர் அவரது அனுபவம் மாறும் ஆராய்ச்சியின் அடிப்படையில் முதலீடு செய்வதற்கான பங்குகள் மற்றும் பிரிவுகளைத் தீர்மானிக்கிறார். ஈக்குவிட்டிக்கான வரையறுக்கப்பட்ட ஒதுக்கீடு சந்தை அபாயத்தைக் குறைவாக வைத்துக்கொள்ள உதவி முதலீட்டாளர்களுக்கு பங்கு சந்தையின் செல்வம்-உருவாக்கும் திறனை அளிக்கிறது.

ஏன் மூலதனப் பாதுகாப்பு நிதிகள் வைப்புத்தொகைகளை விட சிறப்பானது?

மூலதனப் பாதுகாப்பு நிதிகள் வழங்கும் அதிக வருவாய்களுக்கான சாத்தியம் என்பதே பாரம்பரிய வைப்பு நிதிகளை (FD) விட சிறப்பானதாக கருதப்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று.மூலதனப் பாதுகாப்பு நிதிகளின் ஈக்குவிட்டி கூறு பங்கு சந்தையின் செல்வத்தை உருவாக்கும் தன்மையை வழங்குவதோடு உத்தி சார்ந்த சொத்து ஒதுக்கீடு உத்திகள் வாயிலாக மதிப்பு குறையும் அபாயத்தைக் குறைக்கிறது.

FDகளுடன், உங்கள் முதலீடுகள் மீது ஒரு நிலையான வருவாய் மட்டுமே பெறுவீர்கள். இங்கு அதிக வருவாய்களுக்கான சாத்தியம் இல்லை. மூலதனப் பாதுகாப்பு நிதிகளின் வருவாய் உற்பத்தி திறனை விட வைப்பு நிதிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் குறைவாக உள்ளன.

மூலதனப் பாதுகாப்பு நிதியில் யார் முதலீடு செய்யலாம்?

அதிகரித்த வருவாய்களை விட மூலதனப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் பாரம்பரிய முதலீட்டாளர்கள், மூலதனப் பாதுகாப்பு நிதியைக் கவனத்தில் கொள்ளலாம். முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தின் உயர் பாதுகாப்புக்கு கூடுதலாக, இந்த நிதிகள் ஈக்குவிட்டி கூறு இருப்பதால் நடுத்தர மற்றும் நீண்ட காலங்களில் ஓரளவு வருவாய்கள் அளிக்கின்றன.

கூடுதலாக, புதிதாக முதலீடு செய்பவர்கள், ஓய்வு பெற்ற தனிநபர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் மூலதனப் பாதுகாப்பு நிதிகளின் நிலைப்புத்தன்மை மற்றும் வருவாய்-உருவாக்கும் திறனால் ஈர்க்கப்படுவார்கள். எனவே, அபாயத்தை விரும்பாத முதலீட்டாளர்கள் மூலதனப் பாதுகாப்பு நிதிகளில் முதலீடு செய்வதன் வாயிலாக தங்கள் போர்ட்போலியோ அபாயத்தைப் பல்வகைப்படுத்துகிறார்கள் மற்றும் தங்கள் முதலீடுகளுக்கு நிலைப்புத்தன்மையை அளிக்கிறார்கள்.

மூலதனப் பாதுகாப்பு நிதிகள் மீதான வருவாய்க்கு உத்திரவாதம் இருக்கிறதா?

சந்தையுடன் தொடர்புடைய எந்த முதலீட்டு தேர்வுக்கும், மூலதனப் பாதுகாப்பு நிதிகள் உட்பட வருவாய்கள் என்பது உறுதியானது அல்ல. இந்த நிதிகள் தொகையின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை அரசு பத்திரங்கள், டி-பத்திரங்கள் மற்றும் உயர் மதிப்பு கொண்ட நிறுவன பத்திரங்கள் போன்ற உயர் தர கடன் பத்திரங்களில் முதலீடு செய்தாலும், இவற்றுக்கும் வட்டி மற்றும் கடன் அபாயங்கள் உள்ளது.

அதேநேரம், நிதியின் ஈக்குவிட்டி கூறு சந்தை அபாயம் மற்றும் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது. எனவே, சந்தை வீழ்ச்சி அடையும் போது இதன் செயல்திறனும் பெரிதாக பாதிக்கப்படும். நிதி மேலாளரின் முதலீட்டு முடிவுகள் முதலீடு மீதான வருவாய்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, முதலீடு செய்யும் முன் நிதியின் வரலாறு, முதலீட்டு உத்தி மற்றும் அபாயக் காரணிகள் போன்றவற்றை கவனமாக பார்ப்பது நல்லது.

நான் ஒரு மூலதனப் பாதுகாப்பு நிதியை எப்படி தேர்வு செய்வது? 

சரியான மூலதனப் பாதுகாப்பு நிதியைத் தேர்வு செய்ய சிறப்பானஆராய்ச்சி மற்றும் பல காரணிகளைக் கருத்தில் கொள்ளுதல் போன்றவை தேவைப்படுகிறது. நிதிகளைத் தேர்வு செய்வதற்கு முன் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய காரணிகளின் விரைவான அறிமுகத்தைப் பார்க்கலாம்.

  • முதலீட்டு நோக்கம்

ஒவ்வொரு மூலதனப் பாதுகாப்பு நிதியின் முதன்மை நோக்கம் என்பது மூலதனக் பாதுகாப்பு. எனினும், நிதி முதலீட்டு நோக்கத்தில் சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆகையால், முதலீடு செய்யும் முன் உங்கள் முதலீட்டு நோக்கம் இலக்குகளுடன் பொருந்துகிறதா என்பதை உறுதி செய்ய நிதி சலுகை ஆவணங்களை நன்றாக படித்து பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

  • முதலீட்டு வரம்பு

மூலதனப் பாதுகாப்பு நிதிகள் குளோஸ்ட்-எண்ட் நிதிகள் மற்றும் வெவ்வேறு முதிர்வு காலங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, ஒரு நிதி ஒரு வருட முதிர்வு காலத்தைக் கொண்டிருக்கலாம். இங்கு மற்றொன்று மூன்று வருடங்களுக்கு பின் முதிர்வடைகிறது. ஒரு நிதியைத் தேர்வு செய்யும்போது, உங்கள் முதலீட்டு வரம்புடன் அதன் முதிர்வு காலம் பொருந்துகிறது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

  • அபாயத்தைத் தாங்கும் திறன் 

மூலதனப் பாதுகாப்பு நிதிகளின் அபாயத்தைத் தாங்கும் திறன் அதன் சொத்து ஒதுக்கீட்டு சதவீதங்கள் மற்றும் பங்குகள், பத்திரங்கள் மற்றும் பணத்தின் கலவையைப் பொறுத்து மாறுபடலாம். உதாரணமாக, அதன் தொகையில் 20% ஈக்குவிட்டியில் முதலீடு செய்யும் ஒரு நிதி அதன் தொகையில் 10% ஈக்குவிட்டியில் முதலீடு செய்யும் ஒரு நிதியை விட அதிக அபாயத்தை எதிர்கொள்கிறது.

  • சொத்து மதிப்பீடுகள் 

சொத்து மதிப்பீடு என்பது ஒரு மூலதனப் பாதுகாப்பு நிதியைத் தேர்வு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய காரணி. குறைந்த மதிப்பீடுகள் உள்ள பத்திரங்களைக் காட்டிலும் AA மற்றும் AAA மதிப்பிடப்பட்ட பத்திரங்கள் பாதுகாப்பானவை.

  • சொத்து ஒதுக்கீடு 

மூலதனப் பாதுகாப்பு நிதிகளின் சொத்து ஒதுக்கீடு கலவை முதலீட்டு நோக்கம், அபாயத்தைத் தாங்கும் திறன், முதலீட்டு வரம்பு மற்றும் நிதி மேலாளரின் விருப்பங்கள் போன்ற காரணிகளைப் பொறுத்து வேறுபடுகிறது. இந்த நிதி சொத்து ஒதுக்கீடு எப்போதும் உங்கள் இலக்குகளுடன் பொருந்தி போக வேண்டும்.

  • செலவு விகிதம்

செலவு விகிதம்என்பது மியூச்சுவல் ஃபண்ட்கள் தங்களது நிர்வாகம், நிதி மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் செலவுகளை ஈடுகட்ட விதிக்கப்படும் ஒரு கட்டணம். அதிக செலவு விகிதங்கள் உங்கள் வருவாய்களை கணிசமாக குறைத்து விடலாம். எனவே, ஒரு சாதாரண கட்டணம் விதிக்கும் நிதிகளைத் தேர்வு செய்வது நல்லது.

முடிவுரை

மூலதனப் பாதுகாப்பு நிதிகள் என்பது அதிக வருவாய்களை விட மூலதனப் பாதுகாப்பை விரும்பும் முதலீட்டாளர்களுக்கான சிறந்த முதலீட்டு தேர்வாக உள்ளது. ஈக்குவிட்டி பிரிவிற்கு குறைவான ஒதுக்கீடு காரணமாக, ஈக்குவிட்டி நிதிகளை விட இந்த நிதிகளுக்கான வருவாய் பெருக்கும் சாத்தியம் ஓரளவிற்கு இருக்கும் மற்றும் ஈக்குவிட்டி நிதிகளுக்கு கிடைப்பதை விட மிக குறைவாக இருக்கும். எனவே, நடப்பில் உள்ள சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப சாத்தியமான வருவாய் எதிர்பார்ப்புகளை வைத்துக்கொள்வது சிறந்தது.

இன்றே ஏஞ்சல் ஒன்-ல் ஒரு டீமேட் கணக்கைத் தொடங்கி பல்வேறு முதலீட்டு தேர்வுகளை ஆராயுங்கள்.

FAQs

மூலதனப் பாதுகாப்பு நிதிகளுக்கான பொதுவான முதலீட்டு வரம்பு என்ன?

மூலதனப் பாதுகாப்பு நிதிகள் என்பது ஒரு குறிப்பிட்ட முதிர்வு தேதி கொண்ட குளோஸ்ட்-எண்ட் நிதிகள். இதற்கான முதலீட்டு வரம்பு நீங்கள் முதலீடு செய்யும் நிதியின் வகையைப் பொறுத்து மாறுபடுகிறது. உதாரணமாக, சில நிதிகள் 3-வருட முதிர்வு தேதியைக் கொண்டிருக்கும், வேறு சில நீண்ட கால முதிர்வு தேதியைக் கொண்டிருக்கும்.

பிற முதலீட்டு தேர்வுகளை ஒப்பிடும்போது மூலதனப் பாதுகாப்பு நிதிகள் எந்த அளவிற்கு அபாயம் உள்ளவை?

மூலதனப் பாதுகாப்பு நிதிகள் மூலதனப் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தினாலும், இவையும் ஒரு குறிப்பிட்ட சந்தை மற்றும் கடன் அபாயத்தைக் கொண்டுள்ளன. எனினும், பிற மியூச்சுவல் ஃபண்ட்களுடன் ஒப்பிடும்போது, மூலதனப் பாதுகாப்பு நிதிக்கான அபாயம் தாங்கும் திறன் மிக குறைவு. உண்மையில், அது பாரம்பரிய குறைந்த அபாயம் கொண்ட நிலையான-வருமானப் பத்திரங்கள் மற்றும் அதிக அபாயம் கொண்ட ஈக்குவிட்டி நிதிகள் இடையே உள்ளது.

மூலதனப் பாதுகாப்பு நிதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் என்ன?

பிற சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீடு போல, மூலதனப் பாதுகாப்பு நிதிகளின் செயல்திறனில் பல காரணிகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த நிதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் சில முக்கிய காரணிகள் நிதி மேலாளரின் முடிவுகள், வட்டி விகித மாற்றங்கள், அதன் கீழ் உள்ள சொத்துக்களின் செயல்பாடு, சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் கடன் அபாயம்.

மூலதனப் பாதுகாப்பு நிதிகளின் முதிர்வு தேதிக்கு முன் முதலீட்டாளர்கள் தங்கள் நிதிகள் மீது அணுகலைப் பெற முடியுமா?

இல்லை. மூலதனப் பாதுகாப்பு நிதிகள் குளோஸ்ட் எண்ட் நிதிகள் என்பதால், அவை ஒரு குறிப்பிட்ட முதிர்வு காலத்துடன் வருகின்றன. குறிப்பிட்ட காலம் முடிவதற்கு முன் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைத் திரும்ப பெற முடியாது.

மூலதனப் பாதுகாப்பு நிதிகள் முதலீட்டுடன் ஏதேனும் தொடர்புடைய கட்டணங்கள் உள்ளதா?

ஆம். மூலதனப் பாதுகாப்பு நிதிகளில் முதலீடு செய்யும் போது செலவு விகிதம், நிர்வாகக் கட்டணம் மற்றும் பத்திரப்பதிவு போன்ற சில பொதுவான கட்டணங்களை நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும்.