இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதற்கான கட்டணங்கள் மற்றும் செலவுகள்

சொத்து மேலாண்மை நிறுவனங்கள் (Asset Management Companies (AMCs)) மியூச்சுவல் ஃபண்ட்கள் மீது வெவ்வேறு கட்டணங்களை விதிக்கிறது. பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் கட்டணங்கள் என்ன மற்றும் அவை ஏன் விதிக்கப்படுகின்றன என்பதை அறிவது நீங்கள் சிறப்பான முடிவுகளை எடுக்க

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் நீண்ட காலத்தில் செல்வத்தை உருவாக்குவதற்கான ஒரு அணுகக்கூடிய மற்றும் பல்வகைப்படுத்தப்பட்ட வழியை அளிக்கிறது. இவை சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான பாரம்பரிய முதலீடுகளை விட அதிக வருவாய்கள் உருவாக்கும் திறன் கொண்டவை. எனினும், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுடன் வசூலிக்கப்படும் பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் கட்டணங்களைப் புரிந்துகொள்வது அவசியம். இந்தக் கட்டுரையில், நாம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பொதுவாக விதிக்கும் பல்வேறு கட்டணங்கள் மற்றும் அவற்றுக்கு என்ன பொருள் என்பதைப் பார்க்கலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுடன் தொடர்புடைய கட்டணங்கள் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட்களுடன், மூன்று முக்கிய கட்டணங்கள் விதிக்கப்படுகிறது. அதை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் – செலவு விகிதம், பரிமாற்றக் கட்டணங்கள் மற்றும் எக்ஸிட் லோட். இந்த மூன்று கட்டணங்கள் ஒவ்வொன்றையும் நன்றாக புரிந்துகொள்வோம் மற்றும் அவை சொத்துமேலாண்மைநிறுவனங்களால் (AMCs) ஏன் விதிக்கப்படுகிறது என அறிந்து கொள்வோம்.

1.செலவு விகிதம் 

மியூச்சுவல் ஃபண்ட் செலவு விகிதம் என்பது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான கட்டணங்களில் ஒன்று. இது நிதியின் அன்றாட நிகர சொத்துக்களின் சதவீதமாக விதிக்கப்படும் ஒரு ஆண்டு கட்டணம். AMCs மியூச்சுவல் ஃபண்ட்களை நிர்வகிப்பதில் உள்ள செலவுகளை ஈடு செய்வதற்காக செலவு விகிதத்தை விதிக்கின்றன.

இந்தச் செலவுகளில், பிற செலவுகளுடன் மியூச்சுவல் ஃபண்ட் மேலாண்மை செலவு, நிர்வாகச் செலவுகள், பகிர்தல் மற்றும் சந்தைப்படுத்தல் செலவுகள், நிதி மேலாளர் செலவுகள், பதிவாளர் செலவுகள் மற்றும் காப்பாளர் செலவுகள் போன்றவற்றை உள்ளடக்குகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் செலவு விகிதம் என்பது மியூச்சுவல் ஃபண்ட்கள் உடன் தொடர்புடைய முக்கிய கட்டணம் மற்றும் உங்கள் முதலீடு மீதான வருவாய்கள் மீது குறிப்பிடத்தக்க அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு மியூச்சுவல் ஃபண்ட்டின் செலவு விகிதம் 1.5% மற்றும் நீங்கள் ₹1,80,000 நிதியில் முதலீடு செய்துள்ளீர்கள் என்றால், ஆண்டுக்கு ₹2,700 (₹1,80,000 * 1.5%) செலுத்த வேண்டி இருக்கும்.

அதிக மியூச்சுவல் ஃபண்ட் செலவு விகிதம், குறைந்த வருவாய்கள். இந்தக் குறிப்பிட்ட கட்டணம் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டால், ஒரு குறைந்த செலவு விகிதம் கொண்ட ஒரு நிதியைத் தேர்வு செய்வது பரிந்துரைக்கப்படுகிறது. இங்கு நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் AMC-களுக்கு அவர்கள் விருப்பப்படி செலவு விகிதத்தை விதிப்பதற்கு சுதந்திரம் உண்டு, இது இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தால் (SEBI) வரையறுக்கப்பட்ட அதிகபட்ச வரம்புகளுக்கு உட்பட்டது. தானியங்கி செயல்பாட்டால் நிர்வகிக்கப்படும் நிதிகளை விட நிபுணர்களால் நிர்வகிக்கப்படும் மியூச்சுவல் ஃபண்ட்கள் உயர் செலவு விகிதத்தைக் கொண்டுள்ளது.

2. பரிமாற்றக் கட்டணங்கள் 

பரிமாற்றக் கட்டணங்கள் என்பதுமியூச்சுவல் ஃபண்டிற்கான கட்டணங்கள் இவை நீங்கள் யூனிட்களை வாங்கும்போது மற்றும் விற்கும்போது விதிக்கப்படும். இங்கு மொத்த மதிப்பு ஒரு குறிப்பிட்ட வரம்பைத் தாண்டுகிறது. இந்தியாவில், இந்த வரம்பு ₹10,000 மாக வைக்கப்பட்டுள்ளது. அதன் பொருள் நீங்கள் ₹10,000 அல்லது அதற்கு மேல் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை வாங்கினால், நீங்கள் பரிமாற்றக் கட்டணங்களைச் செலுத்த வேண்டி இருக்கும்.

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தால் (SEBI) பரிந்துரைக்கப்பட்ட ஒழுங்குமுறைகளின் படி, புதிய முதலீட்டாளர்களின் மியூச்சுவல் ஃபண்ட்கள் பரிவர்த்தனை மதிப்பு ₹10,000 க்கு அதிகமானால் அதிகபட்ச பரிவர்த்தனை கட்டணமாக ₹150 விதிக்கப்படுகிறது. ஏற்கனவே கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் நிகழ்வில், விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச பரிவர்த்தனை கட்டணம் ₹100 யாக இருக்கும்.

3. எக்ஸிட் லோட் 

மியூச்சுவல் ஃபண்ட் கட்டணங்கள் மற்றும் செலவுகள் மற்றொரு முக்கிய கூறு எக்ஸிட் லோட். இது முதலீட்டாளர் வைத்திருக்கக்கூடிய குறிப்பிட்ட காலம் முடிவதற்கு முன்பே உங்கள் முதலீடுகளைத் திரும்ப பெற விரும்பினால் விதிக்கப்படும் ஒரு கட்டணம். எக்ஸிட் லோடின் முதன்மையான நோக்கம் முதலீட்டாளர்கள் திட்டத்தில் இருந்து முன்கூட்டியே வெளியேறுவதைத் தடுப்பது மற்றும் முன்கூட்டியே வெளியேறுவதால் AMCகளுக்கு ஏற்படக்கூடிய செலவுகளை ஈடுகட்ட விதிக்கப்படுகிறது.

AMC-ன் விருப்பத்தின் பேரில் எக்ஸிட் லோட்டின் சதவீதம் விதிக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். பொதுவாக, பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட்கள் திரும்ப பெறும் மொத்த மதிப்பின் மீது 1% லோட்டை விதிக்கிறது. எனவே, உங்கள் முன்கூட்டிய திரும்பப்பெறுதல் மதிப்பு ₹50,000 என்றால், நீங்கள் ₹500 மதிப்பிலான எக்ஸிட் லோடைச் செலுத்த வேண்டி இருக்கும் (₹50,000 * 1%).

அதாவது, அனைத்து மியூச்சுவல் ஃபண்ட்களும் எக்ஸிட் லோடை விதிப்பதில்லை. எனவே, குறிப்பிட்ட வைத்திருக்கும் காலம் முடிவதற்கு முன்பே மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை விற்க நீங்கள் திட்டமிட்டால், நீங்கள் எக்ஸிட் லோடை விதிக்காத நிதியைத் தேர்வு செய்வது நல்லது.

வழக்கமான திட்டங்கள் ஏன் அதிக செலவு விகிதத்தைக் கொண்டுள்ளன?

சொத்து மேலாண்மை நிறுவனங்கள், பொதுவாக ஒரே மியூச்சுவல் ஃபண்ட் மீது இரண்டு வெவ்வேறு வகையான திட்டங்களை வழங்குகிறது – ஒரு நேரடி திட்டம் மற்றும் வழக்கமான திட்டம். நேரடி திட்டத்தில், நீங்கள் AMC வாயிலாக ஒரு மியூச்சுவல் ஃபண்ட்டில் நேரடியாக முதலீடு செய்வீர்கள். ஒரு வழக்கமான திட்டத்தில், சொத்து மேலாண்மை நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு விநியோகஸ்தர் அல்லது தரகர் வாயிலாக நிதியில் முதலீடு செய்வீர்கள்.

ஒரு மியூச்சுவல் ஃபண்ட்டில் நேரடி மற்றும் வழக்கமான திட்டங்கள் என இரண்டும் அனைத்து அம்சங்களிலும், அதாவது சொத்துக்களின் போர்ட்போலியோ முதல் நிதி மேலாளர் மற்றும் அதன் உத்திகள் வரை ஒரே மாதிரியாக உள்ளது. இவை ஒரு அம்சத்தில் வேறுபடுகிறது – செலவு விகிதம்.

ஒரே மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நேரடி திட்டங்களை விட வழக்கமான திட்டங்கள் அதிக செலவு விகிதங்களைக் கொண்டுள்ளது. இதற்கான முதன்மையான காரணம் வழக்கமான திட்டத்தில் விநியோகஸ்தர் அல்லது தரகரின் தொடர்பு இருப்பதே. விநியோகச் செலவுகள் மற்றும் தரகர் கட்டணங்கள் போன்ற செலவுகள் வழக்கமான திட்டங்களின் செலவு விகிதத்தில் சேர்க்கப்படுகின்றன. எனவே, வழக்கமான திட்டம் நேரடி திட்டத்தை விட அதிக செலவு கொண்டதாக மாறுகிறது.

இந்தியாவில் அதிகபட்ச செலவு விகித வரம்பு என்ன?

SEBI, சொத்து மேலாண்மை நிறுவனங்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் செலவு விகிதங்களை நிர்ணயித்துக்கொள்ளும் சுதந்திரத்தை அளித்துள்ளது. அதாவது, SEBI மியூச்சுவல் ஃபண்ட் ஒழுங்குமுறைகள் படி ஒழுங்குமுறை 52 ல் குறிப்பிட்டுள்ளவாறு AMCகள் அதிகபட்ச செலவு விகித வரம்புகளைத் தாண்ட கூடாது.

AMCகள் விதிக்கக்கூடிய அதிகபட்ச செலவு விகிதமானது மேலாண்மையின் கீழ் உள்ள மொத்த சொத்துக்கள் மற்றும் நிதியின் வகையைப் பொறுத்துள்ளது. ஒரு நிதி மேலாண்மையின் கீழ் அதிக சொத்துகள் இருந்தால், அதன் செலவு விகிதம் குறைவாக இருக்கும். கீழ்கண்ட அட்டவணையில் செபியால் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலாண்மையின் கீழ் உள்ள சொத்துக்கள் (AUM) கடன் மியூச்சுவல் ஃபண்ட் 

செலவு விகித வரம்புகள் 

ஈக்குவிட்டி மியூச்சுவல் ஃபண்ட்  செலவு விகித வரம்புகள் 
₹500 கோடிகள் வரை 2.00% 2.25%
அடுத்த ₹250 கோடிகளுக்கு 1.75% 2.00%
அடுத்த ₹1,250 கோடிகளுக்கு 1.50% 1.75%
அடுத்த ₹3,000 கோடிகளுக்கு 1.35% 1.60%
அடுத்த ₹5,000 கோடிகளுக்கு 1.25% 1.50%
அடுத்த ₹40,000 கோடிகளுக்கு அன்றாட நிகர சொத்துகளில் அதிகரிக்கும் ஒவ்வொரு ₹5,000 கோடிக்கும் செலவு விகிதம் 0.05% குறைகிறது அன்றாட நிகர சொத்துகளில் அதிகரிக்கும் ஒவ்வொரு ₹5,000 கோடிக்கும் செலவு விகிதம் 0.05% குறைகிறது
₹50,000 கோடிகளுக்கு மேல் 0.80% 1.05%

முடிவுரை 

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மீதான மியூச்சுவல் ஃபண்ட் கட்டணங்கள் மற்றும் செலவுகள் என்பது முக்கிய கூறுகள் ஆகும். இந்தக் கட்டணங்கள் உங்கள் முதலீடுகளில் இருந்து நீங்கள் பெறக்கூடிய வருவாய்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறைந்த மியூச்சுவல் ஃபண்ட் கட்டணங்கள், அதிக வருவாய்கள்.

அதாவது, ஒரு நிதியைத் தேர்வு செய்யும் போது மியூச்சுவல் ஃபண்ட் கட்டணங்களுக்கு கூடுதலாக, முதலீட்டு நோக்கங்கள், அபாயங்களை எதிர்கொள்ளும் திறன், முந்தைய செயல்பாடு மற்றும் நிதி மேலாளரின் நிபுணத்துவம் போன்ற காரணிகளையும் கருத்தில் கொள்வதை உறுதி செய்யுங்கள். இது உங்கள் நிதி இலக்குகளுடன் ஒத்துபோகக்கூடிய தெளிவான முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவுகிறது.

இன்றே ஏஞ்சல் ஒன் உடன் ஒரு டீமேட் கணக்கைத் ஆரம்பித்து பல்வேறு முதலீட்டு தேர்வுகளை ஆராயுங்கள்.

FAQs

மியூச்சுவல் ஃபண்ட்களுடன் தொடர்புடைய சில கட்டணங்கள் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட் செலவு விகிதம், எக்ஸிட் லோட் மற்றும் பரிவர்த்தனை கட்டணங்கள் போன்றவை இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட்களுடன் தொடர்புடைய சில கட்டணங்கள் ஆகும்.

ஒரு செலவு விகிதம் என்றால் என்ன, மற்றும் அது எனது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மீது எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

மியூச்சுவல் ஃபண்ட் செலவு விகிதம் என்பது ஒரு சொத்து மேலாண்மை நிறுவனத்தின் வசூலிக்கும் ஒரு கட்டணம். இது சதவீதத்தில் குறிப்பிடப்படுகிறது மற்றும் உங்கள் முதலீட்டின் மொத்த மதிப்பு மீது விதிக்கப்படுகிறது. செலவு விகிதம் என்பது நிதி மேலாண்மை, நிர்வாகம், சந்தைப்படுத்தல் மற்றும் பிற செயல்பாடுகளுடன் தொடர்புடைய செலவுகளை ஈடு செய்வதற்காக விதிக்கப்படுகிறது.

இந்தியாவில் என்ட்ரி லோட்கள் என்பது மியூச்சுவல் ஃபண்ட் கட்டணங்கள் மற்றும் செலவுகளின் ஒரு பகுதியா?

இல்லை. இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) என்ட்ரி லோட்கள் எனும் கருத்தை மியூச்சுவல் ஃபண்ட்களில் இருந்து அகற்றி விட்டது. இவ்வகையான என்ட்ரி லோட்களுக்கு கட்டணம் விதிக்கும் செயல்முறை ஆகஸ்ட் 2009 ஆண்டு முதல் கைவிடப்பட்டது.

எக்ஸிட் லோட் என்றால் என்ன, மற்றும் அவை எப்போது விதிக்கப்படுகின்றன?

எக்ஸிட் லோட் என்பது ஒரு வகையான மியூச்சுவல் ஃபண்ட் கட்டணம் மற்றும் செலவு. இது குறிப்பிடத்தக்க வைத்திருக்ககூடிய காலத்திற்கு முன்பாக உங்கள் முதலீடுகளை நீங்கள் திரும்ப பெற விரும்பினால் விதிக்கப்படுகிறது. இந்தக் கட்டணங்கள் முதலீட்டாளர்கள் குறுகிய-கால வர்த்தகம் செய்தல் மற்றும் முன்கூட்டிய திரும்பப் பெறுதலால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திற்கு ஏற்படக்கூடிய செலவுகளை ஈடு செய்வதற்காக விதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வைத்திருக்கக்கூடிய காலம் முடிந்துவிட்டால், எக்ஸிட் லோட்கள் விதிக்கப்படுவதில்லை.

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் கட்டணங்களை நிர்வகிக்கக்கூடிய ஏதேனும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் உள்ளதா?

ஆம். SEBI, இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் கட்டணங்களுடன் தொடர்புடைய பல விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் கட்டணங்களுடன் தொடர்புடைய SEBI-ன் இந்த ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டாளர்களின் விருப்பங்களைப் பாதுகாக்கிறது.