What Is a NFO (New Fund Offer) ?

Podcast Duration: 7:34
என்எஃப்ஓ (நியூ ஃபண்ட் ஆஃபர்) என்றால் என்ன? வணக்கம் நண்பர்களே ஏஞ்சல் புரோக்கிங்கின் இந்த வலையொலிக்கு வரவேற்கிறேன்! முதலீட்டு உலகத்தில் இரண்டு நாட்கள் ஒரே மாதிரி இருக்க வாய்ப்பில்லை - வாழ்க்கைக்கும் இது பொருந்தும் என்று உங்களால் சொல்ல முடியும், ஆனால் தினசரி அடிப்படையில் ஸ்டாக் மார்க்கெட்டில் பல புதிய விஷயங்கள் மேலும் கீழுமாக மாறுகிறது ஆனால் வாழ்க்கையை பற்றி நம் அனைவராலும் இது போல் கூற முடியாது, உண்மையில் பலர் தங்களது தினசரி வாழ்க்கையிலிருந்து சலித்துப் போய் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியைத் தேடி அலைவதை தங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக மாற்றி விடுகிறார்கள். இதற்கு உதாரணம் எனது நண்பர் கார்த்திக் அவர் தினமும் ஏதேனும் ஒரு நண்பரை அழைத்து மலை ஏறும் ஒரு பயணத்தை மேற்கொள்ளலாம் என குறைந்தது 15 நிமிடங்கள் பேசி வற்புறுத்துவார். ஆனால் என்னுடைய மற்றொரு நண்பர் கெனித் சந்தையில் இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட்டில் என்ன சலுகைகள் வழங்கப்படுகின்றன மேலும் அதற்கான ஸ்டேடிஸ்டிக்ஸ் ஆகியவற்றை கண்டு அலுத்துவிட்டார் - அதில் ஏகப்பட்டது இருப்பதனால், எந்த மியூச்சுவல் ஃபண்ட்டில் பெயரை எடுத்தாலும், அது 1, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கு பின்னர் உள்ள எக்ஸ்சிட் லோட் இம்பிளிகேஷன்ஸ் மற்றும் ஹோல்டிங்ஸ் வரையில் மட்டும்தான் தகவல் தெரிவிக்கின்றன. எண்ணி எண்ணி உங்கள் விரல்கள் ஓய்ந்துவிடும். அவர் புதிய மியூச்சுவல் ஃபண்ட்களில் செய்திகளை கண்காணித்து வருகிறார். ​இந்தக் கதையைக் கேட்ட எனக்கு NFO பற்றி கூற ஒரு யோசனை தோன்றியுள்ளது! தாமதமில்லாமல் தொடங்கலாம் வாருங்கள், முதலில் NFO -இன் அர்த்தம் என்ன என்று பார்ப்போம், மேலும் புதிய மியூச்சுவல் ஃபண்ட்களில் கெனித் இத்தனை சுவாரஸ்யம் கொண்டிருப்பது ஏன் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். ​NFO -இன் விரிவாக்கம் நியூ ஃபண்ட் ஆஃபரிங் என்பதாகும். இந்த விரிவாக்கத்தின் படி உங்களுக்கு என்ன புரிகிறது உதாரணமாக நியூ ஃபண்ட் ஆஃபரிங்கின் அர்த்தம் சந்தையில் புதிதாக வந்த மியூச்சுவல் ஃபண்ட் சலுகை வழங்கப்படுகிறது என்பதாகும். வேறு எதுவும் தோன்றுகிறதா யாருக்காவது? இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங் என்பது நினைவில் இருக்கிறதா? புதிய பங்குகள் சந்தையில் வழங்கப்படுகிறது. அடிப்படையில் NFO, IPO -வை ஒத்ததாகும், வித்தியாசம் என்னவென்றால் NFO மூலம் நிறுவனங்கள் சொத்து நிறுவலுக்காக மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக செச்கியூரிடிஸ்களை வாங்கி நிதி திரட்ட முற்படுகிறது. ​அப்படி என்றால் ஒரு முதலீட்டாளராக NFO -ஆல் உங்களுக்கு கிடைக்கும் பயன் என்ன? அதை இப்போது பார்க்கலாம். ​எப்போதெல்லாம் ஒரு சொத்து நிறுவல் நிறுவனம் ஒரு புதிய நிதியை வழங்குகிறதோ அப்போதெல்லாம் அது அதன் யூனிட்டுக்கு ஒரு விலையை நிர்ணயம் செய்து சந்தைக்கு வழங்குகிறது. இந்த நிர்ணயிக்கப்பட்ட விலை பொதுவாக பத்து ரூபாயாக இருக்கும் - அதாவது mutual fund -இன் ஒரு யூனிட் உங்களுக்கு பத்து ரூபாயில் வழங்கப்படும். NFO உடன் வழங்கப்படும் ஆவணத்தில் NFO -இன் முடிவில் உங்கள் பணம் எங்கே ஒருங்கிணைக்கப்பட்டு என்ன நிகழும் என்பதை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். இந்த ஆவணம் ஆஃபர் டாக்குமென்ட் என்று அழைக்கப்படும். ​NFO இஷ்யுக்கள் பொதுவாக 30 நாட்கள் வரை சந்தையில் இருக்கும். NFO -யிலும் இரண்டு வகைகள் உள்ளன அவை ஓபன் எண்டேட் NFO -கள் மற்றும் குளோஸ் எண்டேட் NFO -கள். இவற்றிற்கு இடையேயான வித்தியாசம் என்னவென்றால் குளோஸ் எண்டேட் NFO -களில் உங்களது பணம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை முடக்கி வைக்கப்படும், மேலும் அந்தக் காலத்தில் உங்களுடைய நிதிகளை நீங்கள் திரும்பிப் பெற முடியாது. நுட்ப ரீதியாக, உங்களின் குளோஸ் எண்டேட் ஃபண்ட்களின் யூனிட்டுகளை உங்களால் சந்தையில் விற்க முடியும் ஆனால் அவை குறைந்த லிக்விட் தன்மை கொண்டவை. ​மியூச்சுவல் ஃபண்ட்களில் தொடர்ந்து முதலீடு செய்வதற்கு பதிலாக NFO -கள் மூலம் முதலீடு செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று நீங்கள் யோசிக்கலாம்? நாம் அதை பற்றி தான் இங்கு பேசப்போகிறோம், மேலும் ஒரு நியூ ஃபண்ட் ஆஃபரில் நீங்கள் முதலீடு செய்யும்போது எவற்றை கவனமாகப் பார்க்க வேண்டும் என்பது பற்றிய சில வழிகளையும் காணப்போகிறோம். ​பயன் எண் 1 - NFO -களின் மூலம் நீங்கள் உங்கள் பணத்தை புதிய மற்றும் புதுமையான ஸ்டேர்டிஜி உடன் வளர்க்க முடியும் உதாரணமாக Pre-IPO நிறுவனங்களில் முறையாக முதலீடு செய்வதற்கு உதவும் சில ஃபண்ட்கள் உள்ளன. மேலும் உங்கள் முதலீடுகளை புட் ஆப்ஷன்களைப் பயன்படுத்தி பாதுகாப்பதற்கு மற்றவர்களும் இருக்கிறார்கள். NFO -கள் உங்கள் நிதிகளுக்கு ஒரு புதிய வெளிப்பாட்டை இங்ஙனம் கொடுக்க முடியும். ​பயன் எண் 2 - நீங்கள் உங்கள் NFO -களை சந்தை உச்சத்தில் இருக்கும்போது வாங்கினால் உங்கள் நிதி மேலாளர் உங்கள் நிதிகளை ஹோல்டில் வைத்து குறைந்த அளவில் இருக்கையில் வாங்க முடியும். எனவே மார்க்கெட் வளைவு மேலோங்கி இருக்கும் போது உள் நுழைவதை பற்றி நீங்கள் வருத்தப்பட தேவையில்லை. ​பயன் எண் 3 - சிலருக்கு லாக்கின் காலம் விருப்பமாக இருக்காது. ஆனால் ஸ்டேட்டஸ்டிக்ஸ் பரிந்துரைப்பது என்னவென்றால் பெரும்பாலான மக்கள் ஈக்குவிட்டி மார்க்கெட்டில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை முதலீடு செய்து வைக்கிறார்கள் ஆனாலும் அந்த நீண்டகால முதலீடுகளின் உண்மையான பொட்டன்ஷியல் பெற முடிவதில்லை. மியூச்சுவல் ஃபண்ட்டில் உங்களுக்கு நீண்டகால வெளியீட்டிற்கான தேர்வு கிடைக்கிறது. ​இந்த நன்மைகள் உங்களுடைய நிர்ணயம் மற்றும் NFO -வை வழங்கும் நிறுவனம் மற்றும் அவர்களின் நிதி மேலாளரை பொருத்தும் இருக்கும். இப்போது NFO -இல் பணத்தை முதலீடு செய்வதற்குமுன் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை பார்க்கலாம்: ​எண் 1 - AMC அதாவது NFO -வை இஷ்யு செய்யும் கம்பெனியின் நிறுவல் மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்ட ஆஃபரிங்கை இங்கே கவனித்து சோதித்து பார்க்கவும் ​எண் 2 - NFO -இன் நிதி நிர்வாகத்தை கண்காணிக்கவும்- உங்கள் நிதி மற்றும் பிற மில்லியன் கணக்கான மக்களின் பணத்தை கையாளும் அந்த மக்கள் உண்மையில் பொறுப்பு மற்றும் தகுதி உடையவர்கள் என்பதை கண்காணிக்கவும். ​எண் 3 - ஆஃபர் டாக்குமென்ட்டை நன்கு படிக்கவும் இதில் இன்வெஸ்ட்மெண்ட் ஸ்ட்ராடஜி மற்றும் அலெகேஷன் பற்றிய விவரங்கள் இருக்கும். ​இறுதியாக எண் 4 - NFO -இன் செயலாக்க வரலாறு இருக்காது - மேலும் அதில் செயலாக்க குறியீடுகளும் இருக்காது. எனவே அதில் முதலீடு செய்வதற்குமுன் அதில் உள்ள ஆபத்து மற்றும் திருப்பி அழைக்கும் திறனை நன்கு புரிந்து கொள்ளவும். ​நண்பர்களே இந்த வலையொலி NFO -கள் என்றால் என்ன மற்றும் அவை உங்கள் இன்வெஸ்ட்மெண்ட் ஸ்ட்ராடஜியை மேம்படுத்த எப்படி உதவுகிறது என்பதை பற்றி ஒரு நல்ல விளக்கத்தை உங்களுக்கு வழங்கியிருக்கும். NFO ஆர்வத்தைத் தூண்டக் கூடியவைகளாக இருக்கும், ஆனால் செக்யூரிட்டீஸ் மார்க்கெட்டில் முதலீடு செய்யும் செயல்முறையில் உள்ள ஆபத்துகளை காண மறந்துவிடாதீர்கள் அவை என்ன என்பதை புரிந்துகொள்ள எங்கள் யூடியூப் சேனல் அல்லது www.angelone.in -ஐப் பார்த்துக் கற்றுக் கொள்ளவும்! அடுத்த வலையொலியில் உங்களை காணும் வரை ஏஞ்சல் புரோக்கிங்கின் வணக்கம் மற்றும் முதலீடு செய்ய வாழ்த்துக்கள். ​முதலீடுகள் மற்றும் செக்கியூரிட்டிஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படியுங்கள்.