What Causes a Stock Market Bubble and how to navigate difficult market conditions? | Tamil

Podcast Duration: 6:37
ஒரு ஸ்டாக் மார்க்கெட் பபுளுக்கு என்ன காரணம் மற்றும் கடினமான மார்க்கெட் கண்டிஷன்ஸை எவ்வாறு நேவிகேட் செய்வது? ​ஹலோ பிரெண்ட்ஸ், ஏஞ்சல் ஒன் னின் இந்த இன்போர்மேடிவ் போட்காஸ்டில் உங்களை வரவேற்கிறேன். இன்றைய போட்காஸ்ட் யில் நாம் ஸ்டாக் மார்க்கெட் பபுள் ஐ பற்றி பேச போகிறோம். ​ஸ்டாக் மார்க்கெட் பபுள் ஒரு இன்ட்ரெஸ்டிங் விஷயம். இது மார்க்கெட் கண்டிஷன்ஸ் அல்லது எக்ஸ்டெர்னல் காரணிகள் காரணமாக ஏற்படுவதில்லை இன்ஸ்டெட் இன்வெஸ்ட்டர்ஸ் அண்ட் ட்ரேடர்ஸ் யின் பிஹேவியர் அல்லது காக்னிடிவ் பையசஸின் காரணமாக ஏற்படுகின்றன. குறிப்பாக சொல்ல போனால், மார்க்கெட் பபிள்ஸ் ஹெர்ட் மெண்டாலிட்டி யின் காரணமாக ஏற்படுகின்றன. ​ஸ்டாக் மார்க்கெட் பபுள் எவ்வாறு கிரியேட் ஆகிறது என்று பார்த்தால் ட்ரேடர்ஸ் ஸ்டாக் ப்ரைஸசை இன்க்ரீஸ் செய்யும்போது ஏற்படுகின்றன. இந்த ப்ரைஸ் ரைஸ், ஸ்டாக்ஸ் வால்யுவேஷனின் கம்பெரிசனின் போது ஏற்படுகிறது. ஸ்டாக்ஸ், அஸெட்ஸ் அல்லது மொத்த மார்கெட்ஸின் ப்ரைஸ், ட்ரேடர்ஸின் ஸ்பெகுலேடிவ் டிமாண்ட் காரணமாக அதிகரிக்கிறது. அதாவது, ஸ்டாக்சின் ப்ரைசஸ் இன்ட்ரின்சிகலி அதிகரிப்பதில்லை. இந்த பபுள் இறுதியில் எக்ஸ்ப்ளோட் ஆகி, ஸ்டாக் ப்ரைஸ் வீழ்ச்சியடையும் அளவுக்கு அதிக ஃபிரிக்வென்ஸியில் விற்கப்படுகின்றன. ஸ்டாக் மார்க்கெட் பபுள்ஸ் பர்ஸ்ட் ஆன பிறகு யூஷ்யூவலி ஒரு கிராஷ் ஏற்படும். ​ஹிஸ்டரி ​ஸ்டாக் மார்க்கெட் பபுள்ஸ் க்கு முன்பு சில உதாரணங்கள் நெதர்லாண்ட்ஸில் ரெக்கார்ட் செய்யப்பட்டன. 1600 களில் டட்ச் ரிபப்பிளிக் பைனான்சியல் அண்ட் எக்கோனோமிக் ஆக்டிவிட்டீஸில் நிறைய முன்னேற்றத்தை கொண்டிருந்தன. உலகத்திலேயே முதன் முறையாக இங்கு தான் ஒரு போர்மல் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் அண்ட் ஸ்டாக் மார்க்கெட் எஸ்டாபிளிஷ் ஆனது. இன் ஃபாக்ட், 1630 ஸ் யில் நிகழ்ந்த டட்ச் ட்யூலிப் மேனியா உலகத்திலேயே முதலாவது ஸ்பெகுலேடிவ் பபுள் என்று கருதப்படுகிறது. வேறு சில ஸ்டாக் மார்க்கெட் பபுள்ஸ் பிரான்சில் மிசிசிப்பி ஸ்கீம் மற்றும் இங்கிலாந்தில் சவுத் ஸீ பபுள்ஸ் ஆகும். இருபதாம் நூற்றாண்டின் முக்கிய ஸ்டாக் மார்க்கெட் பபுள்ஸின் 2 மோசமான நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ​1929 யில் யூஸ் யில் வால் ஸ்ட்ரீட் கிராஷ் ஆனது இது தான் கிரேட் டிப்ரெஷனுக்கு காரணமாக அமைந்தது. 1920 ஸ் களில் ரேடியோ, ஏவியேஷன் அண்ட் எலெக்ட்ரிக் பவர் க்ரிட்ஸ் போன்ற பல்வேறு கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வந்தன. அதே போல, 1990 ஸ் யின் இறுதிகளில், புதிய டெக்னோலஜிஸ் எமெர்ஜ் ஆகி வந்தன, இந்த சூழ்நிலையில் ட்ரேடர்ஸின் அதிகமான ஸ்பெகுலேடிவ் ஆக்டிவிட்டீஸியினால் ஏற்பட்டது தான் டாட் காம் பபுள். ஸ்டாக் மார்க்கெட் பபுள்ஸ் யூஷுவலி இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங் அல்லது ஐபிஓ ஸ் யின் டைமில் ஹாட் மார்கெட்ஸ் உருவாகும் போது ஏற்படுகின்றன. இந்த மாதிரியான சமயத்தில் இன்வெஸ்ட்மென்ட் பங்கர்ஸ் ஸ்டாக்ஸை இன்ஃபிளேட்டட் ப்ரைசஸ் யில் இஷ்யூ செய்கின்றனர். ஐபிஓ ஹாட் மார்கெட்ஸில் ஃபண்ட்ஸ் லாங் ஸ்டேண்டிங் எகோனோமிக் வால்யூ கிரியேட் செய்யும் இன்ஸ்டிடூஷன்ஸ் க்கு அலோகேட் ஆவதற்கு பதிலாக ஸ்பெகுலேடிவ் ஏரியாஸில் அலோகேட் ஆகி விடுகின்றன. ஒரு ஸ்டாக் மார்க்கெட் பபுளில் நிறைய ஐபிஓ ஸ் இருந்தால், புது கம்பெனிஸின் ஐபிஓ ஸ் கூட ஃபெயில் ஆவதற்கான வாய்ப்புகள் உண்டு. ​ஸ்டாக் மார்க்கெட் பபுள்ஸ் கிரியேட் ஆவதற்கு ஐந்து ஸ்டேஜஸ் உள்ளன. ​ஸ்டேஜ் 1: டிஸ்பிளேஸ்மென்ட் : இன்வெஸ்ட்டர்ஸ் ஏதாவது ஒரு புது கான்செப்ட் ஐ நோக்கி நகரும் போது டிஸ்பிளேஸ்மென்ட் நடைபெறுகிறது. உதாரணத்துக்கு, ஏதாவது ஒரு புது டெக்னோலஜி அல்லது புது இன்ட்ரெஸ்ட் ரேட்ஸ் அறிமுக படுத்தும் போது, ஹிஸ்டாரிக்கலி குறைவான இன்ட்ரெஸ்ட் ரேட்ஸ் காரணமாக டிஸ்பிளேஸ்மென்ட் கிரியேட் ஆகிறது. ​ஸ்டெப் 2: பூம்: டிஸ்பிளேஸ்மென்ட்டுக்கு பிறகு ப்ரைசஸ் மிகவும் மெதுவாக தான் இன்க்ரீஸ் ஆகும். பிறகு, பெரிய அளவில் இன்வெஸ்ட்டர்ஸ் அண்ட் ட்ரேடர்ஸ் மார்க்கெட்டில் என்டர் செய்வதால் ப்ரைஸ் ரைஸ் யில் மொமென்ட்டம் தென்படும். இதன் மூலம் பூம் ஸ்டேஜ் உருவாகிறது. யூஷுவலி, பூம் யின் போது அந்த அஸெட்டுக்கு நிறைய மீடியா அட்டென்சன் கிடைக்கிறது. அதனால், இந்த ஸ்டாக்கை வாங்குவது ஒரு ஒன்ஸ் இன் எ லைஃப் டைம் அபார்ச்சுனிடி என்று ட்ரேடர்ஸ் நினைக்கின்றனர். இதனால் மேலும் ஸ்பெகுலேஷன் இன்க்ரீஸ் ஆகிறது. ​ஸ்டெப் 3: யுஃபோரியா: இந்த ஸ்டேஜில் இன்வெஸ்ட்டர்ஸ், அசெட்ஸின் ஹை ப்ரைஸ் ஐ பற்றி அதிகமாக யோசிப்பதில்லை. அசெட்ஸின் வால்யுவேஷன் எக்ஸ்ட்ரீம்ஸ் ஐ எட்டி விடுகின்றன. தொடர்ச்சியாக இன்க்ரீஸ் ஆகும் ப்ரைஸ் ஐ ஜஸ்டிஃபய் செய்ய புது புது மேட்ரிக்ஸ் உபயோகப்படுத்த படுகின்றன. ஸ்டெப் 4: ப்ராஃபிட் - டேக்கிங் : இந்த பாயிண்டில் கவனமாக இருக்கும் இன்வெஸ்ட்டர்ஸ் வார்னிங் சைன்ஸை புரிந்து கொண்டு அஸெட்ஸை விற்க ஆரம்பிக்கிறார்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு லாபத்தை ஈட்டுவது தான் இந்த பாயிண்ட்டின் ஐடியா ஆகும். ​ஸ்டெப் 5: பேனிக் : இந்த ஸ்டேஜில் ஸ்டாக் மார்க்கெட் பபுள் பர்ஸ்ட் ஆகி விடுகிறது. ஷேர்ஹோல்டர்ஸ் பேனிக் ஆகும் போது, அஸெட் ப்ரைசஸ் வேகமாக டிக்ரீஸ் ஆக தொடங்குகிறது. இந்த பாயிண்டில், இன்வெஸ்ட்டர்ஸ் எந்த ப்ரைஸிலும் தங்களுடைய ஹோல்ட்டிங்ஸ் ஐ லிக்விடேட் செய்ய விரும்புகிறார்கள். அதனால், சப்ளை டிமாண்ட் ஐ விட அதிகமாக இருப்பதால், ப்ரைசஸ் குறைந்து கொண்டு வருகின்றன. ஸ்டாக் மார்க்கெட் பபூளை நேவிகேட் செய்வது எப்படி? ​யூஷுவலி, ஸ்டாக் மார்க்கெட் பபுளில் பங்கேற்பவர்கள் "ஃபூல்ஸ் கம்பிட்" விளையாடி பார்க்கின்றனர். அவர்கள் நினைப்பது என்னவென்றால், இன்ஃபிளேட்டட் ப்ரைஸில் அவர்களுடைய ஸ்டாக்ஸ் ஐ மக்கள் முட்டாள்தனமாக வாங்குவார்கள். குறைவான இன்ட்ரெஸ்ட் காரணமாக, நிறைய இன்வெஸ்ட்டர்ஸ் இன்ஃபிளேட்டட் ப்ரைஸில் கூட ஷேர்ஸை வாங்குகின்றனர். மிக விரைவில் லாபம் சம்பாதிக்க நினைக்கும் ட்ரேடர்ஸ் பபுள்ஸில் பார்ட்டிசிபேட் செய்கின்றனர். ஆப்வியஸ்லி, ஸ்டாக் மார்க்கெட் பபுள்ஸ் யில் பார்ட்டிசிபேட் செய்வதில் நிறைய ரிஸ்க்ஸ் உள்ளன. இந்த மாதிரியான சூழ்நிலையில், ரேஷனல் ட்ரேடர்ஸ் மார்க்கெட் டைமெர்ஸ் கம்பிட் ஐ வைத்து நேவிகேட் செய்து விளையாடுகின்றனர். வெளியில் இருந்து பார்த்தால், சிம்பிள் ஆக தெரிந்தாலும் இதை செயல்படுத்துவது மிகவும் கடினம். ​இந்த கேமில் முதலீடு செய்வதற்கு, மார்க்கெட் சரியான நிலைக்கு வரும் வரை காத்திருந்து இன்வெஸ்ட் செய்வது தான். இதை இன்வெஸ்ட்டர்ஸ் சரியாக கணிக்க வேண்டும், ஸ்டாக்ஸ் குறைந்த விலையில் இருக்கும் போது வாங்கி பபுள் பர்ஸ்ட் ஆகும் முன்பு விற்று விட வேண்டும். ​பபுள்ஸ் யின் போது இன்வெஸ்ட்டர்ஸ் தங்களுடைய போர்ட்போலியோவில் எஸ்ஐபி ஸை உள்ளடக்கி கொள்ளலாம். இந்த அஸெட் அலோகேஷன் உங்களுடைய குரோத், லிக்விடிட்டி அண்ட் இன்கம் நீட்ஸை பாலன்ஸ் செய்யும். உங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப போர்ட்போலியோவை ரிபாலன்ஸ் செய்யும் போது உங்களுக்கான கம்ஃபோர்ட் ஏரியாவை விட்டு விலகி முதலீடு செய்ய கூடாது என்பதை கவனத்தில் கொள்ளவும். ஈவன் இஃப் யு ஹவ் எ ஃபியர் ஆஃப் மிஸ்ஸிங் அவுட். உங்களுடைய இன்கம், டாக்ஸ் மற்றும் இதேமாதிரியான காஸ்ட்ஸ் ஐ ரிபாலன்ஸ் செய்யும் போதும் கவனத்தில் கொள்ளவும். உங்களுடைய ஈக்விட்டி அண்ட் டெப்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஐ உங்களுடைய ரிஸ்க் அப்பிட்டைட் அண்ட் மற்ற எதிர்பார்ப்புகளை மனதில் கொண்டு அதற்கு ஏற்றார் போல அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். ​இன்றைய போட்காஸ்ட்டில் இவ்வளவு தான். விடை பெறும் முன்பு ஒரு இம்பார்ட்டண்ட் விஷயம், இந்த போட்காஸ்ட் வெறும் எஜூகேஷனல் பர்போசஸ் காக மட்டுமே எடுக்க பட்டது, இன்வெஸ்ட்டரும் தங்களுடைய ரிசர்ச் ஐ கட்டாயம் செய்யவேண்டும். ​இதே மாதிரியான இன்ட்ரெஸ்டிங் போட்காஸ்ட்ஸை ஐ கேட்க யூட்யுப் மற்றும் அதர் சோஷியல் மீடியா செனல்ஸ் மூலம் எங்களை போலோ செய்யவும். அது வரை, குட்பை அண்ட் ஹாப்பி இன்வெஸ்டிங் ​செக்யூரிட்டிஸ் மார்கெட்ஸில் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, இன்வெஸ்ட் செய்வதற்கு முன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்.