How can you be a part-owner of KFC & Pizza Hut? Devyani International IPO/ Everything you need to know about the Devyani International IPO! | Tamil

Podcast Duration: 7:34
கேஎஃப்சி & பிஸ்சா ஹட் யின் பார்ட் டைம் ஓனர் ஆக நீங்கள் எவ்வாறு ஆக முடியும்? ​தேவயானி இன்டெர்னஷனல் ஐபிஓ ஹலோ பிரெண்ட்ஸ், ஏஞ்சல் ஒன் இன் மற்றொரு போட்காஸ்ட்க்கு உங்களை வரவேற்கிறேன். ​பிரெண்ட்ஸ், நாம் இன்று பர்கர்ஸ், பிஸ்சா அண்ட் காஃபி ஐ பற்றி பேச போகிறோம், இல்லை, இல்லை, நீங்க ஃ புட் அல்லது குக்கிங் போட்காஸ்ட் ஐ கிளிக் செய்யவில்லை. ஏஞ்சல் ஒன் இன் போட்காஸ்ட் ஐ தான் கேட்டு கொண்டிருக்கிறீர்கள். ஆக்சுவல்லி, இன்று நாம் தேவயானி இன்டெர்னஷனலின் ஐபிஓ வை பற்றி பேச போகிறோம். தேவயானி இன்டெர்னஷனல் இந்தியாவில் கேஎஃப்சி, பிஸ்சா ஹட் அண்ட் கோஸ்டா காஃ பி ஆகியவற்றின் 655 அவுட்லெட்ஸை ஆப்பரேட் செய்கிறார்கள் அண்ட் இட் இஸ் தி பிக்கஸ்ட் ஃபிரான்ச்சைஸீ ஆஃப் யுஎஸ் பேஸ்டு யம்! ப்ராண்ட்ஸ். கடந்த சில மாதங்களில், கியூஎஸ்ஆர் அதாவது க்விக் சர்வீஸ் ரெஸ்டாரண்ட் இன் ஐபிஓ ஸ் இந்திய மார்க்கெட்டுகளில் மிகவும் பிரபலமாகிவிட்டது. இதற்கு முன்பு, பர்கர் கிங் மற்றும் பார்பெக்யூ நேஷன் ஐபிஓ க்கள் மார்க்கெட்டில் ஏற்கனவே கால் பதித்துவிட்டன. இப்போது தேவியானி இன்டர்நேஷனல் தன்னுடைய 1,400 கோடி ரூபாய் ஐபிஓ ஐ லான்ச் செய்ய செபியை அணுகியுள்ளது. இப்போது கேஎஃப்சி, பிஸ்சா ஹட் அண்ட் கோஸ்டா காஃபி போன்ற கம்பெனிகளின் பார்ட் ஓனர் ஆவதற்கு உங்களிடம் ஒரு யூனிக் அபார்ச்சுனிடி உள்ளது. கேட்பதற்கு எக்சைட்டிங் ஆக இருக்கிறது தான், ஆனால் முதலில் நாம் தேவயானி இன்டர்நெஷனல் என்கிற கம்பெனியை பற்றி தெரிந்துக்கொள்வோம். கேள்வி நம்பர் 1: தேவயானி இன்டர்நேஷனல் ஐபிஓவை ஏன் தாக்கல் செய்கிறது? முதலாவதாக, டெக்னிக்கல் விஷயங்களை பார்ப்போம். தேவயானி இன்டர்நேஷனலின் ஐபிஓ ரூ.400 கோடி மதிப்புள்ள ஈக்விட்டி ஷேர்சின் பிரெஷ் இஷ்யூவும் 12.5 கோடி மதிப்புள்ள ஆஃபர் ஆஃப் சேல் ஷேர்சையும் உள்ளடக்கியது. இந்த 12.5 கோடி மதிப்புள்ள ஷேர்சை இரண்டு கம்பெனிகள் விற்க போகின்றன. டன்எர்ன் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் மொரீஷியஸ் பிரைவேட் லிமிடெட் இது டெமாசெக் ஹோல்ட்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் இன் ஒரு ஹோலி ஓன்ட் சப்சிடியரி ஆகும். இரண்டாவது கம்பெனியின் பெயர் ஆர்ஜே கார்ப் லிமிடெட், இது ஒரு ப்ரமோட்டர் கம்பெனி ஆகும். ஆல்ரைட், சோ ஷேர்ஸ் ஐ என்லிஸ்ட் செய்த பிறகு கம்பெனியின் பிளான்ஸ் என்ன? வெல்,தேவயானி இன்டர்நெஷனல் ஐபிஓ வின் மூலம் வரும் பணத்தை ரூ.357.8 கோடி டெப்ட் செட்டில்மென்ட் க்கு யூஸ் செய்யப்போவதாக தெரிகிறது.இதிலில் இருந்து ஒரு தொகையை ஜெனரல் கார்ப்பரேட் தேவைகளுக்காகவும் யூஸ் செய்யப்போகிறார்கள். ஓகே,சோ ஃபார் சோ குட், இன்னும் பார்க்கலாம். ​கேள்வி நம்பர் 2: இந்த கம்பெனியின் பாக்கிரௌண்ட் என்ன? ​1991 யில் ஆரம்பிக்கப்பட்ட தேவயானி இன்டர்நெஷனல் கம்பெனியின் ஓனர் இந்தியன் பில்லியனர் ரவி ஜெய்ப்பூரியாவின் ஆர்ஜே குரூப். ரவி ஜெய்ப்பூரியாஜி யின் நெட் வொர்த் 3.5 பில்லியன் டாலர்ஸ் ஆகும் மற்றும் உலகிலியே 925த் ரிச்சஸ்ட் பெர்சன் அண்ட் போர்ஃப்ஸ் படி இந்தியாவின் 61ஸ்ட் ரிச்செஸ்ட் பெர்சன் இவர். ​தேவயானி இன்டர்நெஷனல் கம்பெனியின் பெயர் உண்மையில் அவருடைய மகளின் பெயரால் வைக்கப்பட்டுள்ளது. இன்னொரு இன்டரெஸ்டிங் ஃபாக்ட் என்னவென்றால், ஆர்ஜே கார்ப் - தேவயானி இன்டர்நெஷனல் ஐ ஓன் செய்யும் கம்பெனி - இந்தியாவில் பெப்சிகோ கம்பெனியின் லார்ஜெஸ்ட் பாட்டலேர் ஆவார்கள். ​கேள்வி நம்பர் 3: தேவயானி இன்டர்நெஷனல் யின் ஹிஸ்டரி என்ன? 1997 ஆம் ஆண்டில் தான் தேவயானி இன்டர்நேஷனல் முதன்முதலில் யமுடன் டை அப் செய்துக்கொண்டது! இந்தியாவின் முதல் பிஸ்ஸா ஹட் கடையை ஜெய்ப்பூரில் திறந்தது. அதன் பிறகு,தேர் வாஸ் நோ லுக்கிங் பேக். இன்று இந்த கம்பெனி இந்திய முழுவதிலுமாக 297 பிஸ்ஸா ஹட்ஸ், 264 கேஎஃப்சி மற்றும் 44 கோஸ்டா காபி கடைகளை நடத்தி வருகிறது. இதை தவிர, இந்த கம்பெனி வாங்கோ, ஃபுட் ஸ்ட்ரீட், மசாலா ட்விஸ்ட், ஐலே பார், அம்ரேலி மற்றும் க்ர்ரஷ் ஜூஸ் பார் போன்ற அதர் ப்ராண்ட்ஸையும் ஆப்பரேட் செய்கிறது. தேவயானி இன்டர்நெஷனலிடம் இன்று 9000 எம்ப்ளாயீஸ் உள்ளனர். ​கேள்வி நம்பர் 4: தேவயானி இன்டர்நெஷனல் யின் பைனான்சியல்ஸ் என்ன சொல்கின்றன? ​தேவயானி இன்டர்நெஷனலின் மேஜர் ரெவின்யூ கேஎஃப்சி அண்ட் பிஸ்சா ஹட் இல் இருந்து வருகிறது. ​ஃபிஸ்கல் இயர் 19, 20 மற்றும் 21 யில் தேவயானி இன்டர்நெஷனல் கம்பெனியின் மொத்த வருவாயில் கேஎஃப்சி அண்ட் பிஸ்சா ஹட் இன் பங்கு 76%, 77.49% and 92.28% ஆகும். இருப்பினும், இந்த மூன்று ஆண்டுகளில் கம்பெனி பெரும் இழப்பையும் சந்தித்துள்ளது. 19,20 மற்றும் 21 நிதியாண்டுகளில் இந்நிறுவனம் முறையே ரூ .94 கோடி, ரூ .121.4 கோடி மற்றும் ரூ .63 கோடி இழப்புக்களை அறிவித்துள்ளது. ஹ்ம்ம். லாஸஸ் கம்பெனிக்கு ஏற்படுகின்றன தான், ஆனால் எதனால்? இதற்கு கம்பெனி இரண்டு காரணங்களை சொல்கிறது, முதலாவது ரீசன் என்னவென்றால் குறைந்து வரும் ஃபுட்ஃபால்ஸ் இன் காரணத்தினால் கோர் ப்ராண்ட்ஸின் இன்-ஸ்டோர் டைனிங் ரெவின்யூ பாதிக்கப்பட்டுள்ளது. எஃப்வை 20 யில் டோட்டல் ரெவின்யூ 48.85% ஆக இருந்தது, ஆனால் எஃப்வை 21 யில் அது 29.80% ஆக சரிந்து விட்டது. இது இன்-ஸ்டோர் டைனிங் க்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ரெவின்யூவும் வீழ்ச்சியை பதிவு செய்தது. ரெவின்யூ ஃபிரம் ஆப்பரேஷன்ஸ் 25% ஆக குறைந்து, எஃப்வை 20 யில் ரூ.1,516 கோடியாக இருந்தது இப்போது எஃப்வை 21 யில் ரூ.1,134 கோடியாக குறைந்துள்ளது. தேவயானி இன்டர்நெஷனல் தன்னுடைய டிஆர்ஹெச்பி யில் கோவிட் -19 யின் நெகட்டிவ் இம்பாக்ட், எஃப்வை22 யிலும் கன்டினியூ ஆகும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. சோ, இவை தான் தேவயானி இன்டர்நெஷனல் ஐபிஓ வை பற்றிய சில கீ ஃபாக்ட்ஸ். பிரெண்ட்ஸ், ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் செய்வதற்கு முன்பு, நீங்கள் உங்களுடைய சொந்த ரிசர்ச்சை செய்வது மிகவும் இம்பார்ட்டண்ட். பிரெண்ட்ஸ் அண்ட் பேமிலி யின் பேச்சை கேட்டு இன்வெஸ்ட் செய்வது மிகவும் டேஞ்சரான ஒரு விஷயம் இதன் மூலம் உங்களுக்கு பண இழப்பும் நேரிடலாம். நீங்கள் தேவயானி இன்டர்நெஷனல் ஐபிஓ வில் இன்வெஸ்ட் செய்ய விரும்பினால், ஒரு முறை டிராப்ட் ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்ட்ஸ் ஐ கூகிள் செய்து கவனமாக படித்து பாருங்கள். உங்களுக்கு இதனால் லாபம் தான் கிடைக்கும். அண்ட் எஸ், முக்கியமான விஷயம், ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்டிங் இல் ரிஸ்க் எப்போதுமே இருக்கும். இந்த போட்காஸ்ட் வெறும் எஜூகேஷனல் பர்போஸஸ் க்கு மட்டுமே, இன்வெஸ்ட்டர் தன்னுடைய ரிசெர்ச்சை தானே செய்ய வேண்டும். இந்த மாதிரியான இன்டரெஸ்டிங் போட்காஸ்ட்ஸ் ஐ கேட்க எங்களுடைய வெப்சைட், யூட்யூப் அண்ட் அதர் சோசியல் மீடியா சேனல்ஸ் மூலம் எங்களை பாலோ செய்யுங்கள். அது வரை குட்பை அண்ட் ஹாப்பி இன்வெஸ்டிங்! செக்யுரிட்டிஸ் மார்கெட்ஸில் இன்வெஸ்ட்மென்ட் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. இன்வெஸ்ட் செய்வதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களையும் கவனமாக படித்து பார்க்கவும். ​ ​