All you need to know about E-Rupi

Podcast Duration: 7:26
ஈ-ரூபி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் ஹலோ ப்ரெண்ட்ஸ், ஏஞ்சல் ஒன் இன் மற்றும் ஒரு சூப்பர் - இன்ட்ரெஸ்டிங் அண்ட் இன்ஃபோர்மேட்டிவ் போட்காஸ்ட் இல் உங்களை வரவேற்கிறேன். ப்ரெண்ட்ஸ், நாம் இன்று ஈ-ரூபியை பற்றி பேச போகிறோம். இந்த மாத தொடக்கத்தில் பிரதமர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஈ-ரூபியை அறிமுகப்படுத்தினார். நேஷனல் பேமெண்ட்ஸ் கார்போரேஷன் ஆஃப் ,இந்தியா, அதாவது என்பிசிஐ, ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒருவருக்கு பணம் செலுத்துவதற்கான புதிய வழியாக இ-ரூபி ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ​எனவே, ஈ-ரூபி என்றால் என்ன, அதை வைத்து நீங்கள் என்ன செய்ய முடியும்? ஈ-ரூபி ஒரு வவுச்சர் ஆகும், இது ஒரு தனிப்பட்ட நபருக்காக இஷ்யூ செய்யப்படுகிறது. இந்த வவுச்சர் கோட் அவரின் மொபைல் போனில் அனுப்பி வைக்க படும். ​இது எஸ்எம்எஸ் அல்லது ஒரு க்யூ ஆர் கோட் ஆக இருக்கலாம். ​இதை யூஸ் செய்து ஒன் டைம் பேமண்ட் செய்ய முடியும். ரீடைலர்ஸ் அல்லது ஆன்லைன் கட்டணத்தை ஏற்கும் பிசினஸ்மெனுக்கு ஆதரவாக மக்கள் ஈ-ரூபி வவுச்சரை வழங்க முடியும். ​ரீடைலர்ஸ் அல்லது பிசினஸ்மென் பணத்தை உடனடியாக கேஷை போலவே பெறுவார்கள். ஈ-ரூபியை பற்றிய ஒரு இம்பார்ட்டண்ட் விஷயம் என்னவென்றால் உங்களிடம் பேங்க் அக்கௌன்ட் அல்லது பேமண்ட் ஆப் இல்லை என்றாலும் உங்களால் இதை உபயோகித்து மற்றவர்களுக்கு பணம் செலுத்த முடியும். ​நீங்கள் என்ன நினைத்து கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். மார்க்கெட்டில் ஏற்கனவே இவ்வளவு இருக்கும் போது புதிதாக ஒரு பேமண்ட் ஸிஸ்டமை கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? ​வெல், ஈ-ரூபி சந்தையில் உள்ள அனைத்து பேமண்ட் ப்ராடக்ட்ஸ் யில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. ஈ-ரூபியைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்களோ அல்லது அரசாங்கமோ பணம் ஒதுக்கப்பட்ட நோக்கத்திற்காக செலவிடப்படுவதை உறுதிசெய்யலாம். ஒரு வேளை, மருத்துவமனை அல்லது கோவிட் செலவுகளுக்காக அரசு யாருக்காவது பணத்தை ஈ-ரூபியைப் பயன்படுத்தி ஒதுக்கியிருந்தால், அந்தப் பணிக்காக மட்டுமே பணம் செலவழிக்கப்படும் என்பதை அரசாங்கம் உறுதி செய்துகொள்ளலாம். ஈ-ரூபி அறிமுகப்படுத்தப்பட்டவுடன், இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட்ஸின் ரீச் அதிகரிக்கும். எந்தவொரு தனியார் நிறுவனமும் சுகாதார சிகிச்சை, கல்வி அல்லது வேறு எந்த சமூக காரணத்திற்காகவும் ஒருவருக்கு உதவ விரும்பினால், அதை இப்போது பணத்திற்கு பதிலாக ஈ- ரூபியாக வழங்கலாம். இதன் கூடவே, பணம் செலுத்துபவர் வவுச்சருக்கான செல்லுபடியாகும் வாலிடிடியையும் அமைக்கலாம். அரசாங்கம் ஒரு பேமண்ட் வவுச்சரின் டைம்லிமிட்டை 3 மாதங்கள் என்று முடிவு செய்தால், அந்த வவுச்சர் 3 மாதங்களுக்கு பிறகு லாப்ஸ் ஆகி விடும். ​காஸ் அல்லது ஃபெர்டிலைசர் சப்சிடி ஆக இருந்தாலும், சப்சிடி பேமெண்ட்ஸில் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் ஈ-ரூபி ஐ கொண்டு வந்தது. ஏழை மக்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படுவதை உறுதி செய்யாமல் பல முறை நிறைய பெரிய நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு பெரும் சப்சிடி பில்ஸ் ஐ ஜெனெரேட் செய்திருக்கின்றன. ​இதன் விளைவாக, பல பணக்காரர்களுக்கு சப்சிடி கிடைத்து கொண்டிருந்தது அண்ட் கவர்மென்டின் சப்சிடி பில் அதிகரித்து கொண்டிருந்தது வித்தவுட் ரீசிங் தி டார்கெட்டேட் பாப்புலேஷன். இதை உடைப்பதற்கு, கவர்ன்மென்ட் டைரக்ட் பெனிபிட் ட்ரான்ஸபர் ஐ கொண்டு வந்துள்ளது, இதன் மூலம் ஃபண்ட்ஸ் வேர் ரெமிடெட் டைரெக்ட்லி டு தி பேங்க் அகௌண்ட் ஆஃப் தி நீடி. கடந்த சில வருடங்களாக டிபிடி அமைப்பு உருவாகி வருகிறது. அஃபிஷியல் டேட்டாவின் படி இந்தியா 54 அமைச்சகங்களில் 314 டிபிடி திட்டங்களை இயக்குகிறது. எஃப்ஒய்21 இல் ரூ. 551 கோடிக்கு மேல் ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டது. எஃப்ஒய்22 யில் சுமார் 1.30 கோடி ரூபாய்க்கு 155 கோடி பரிவர்த்தனைகள் ரெமிட் செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு சிக்கலான அல்லது பெரிய சிஸ்டமில் பல வகையான ப்ராப்ளம்ஸ் வருவது இயற்கை. ​டிபிடி யில் சில ப்ராபளம்ஸ் வந்தன, உதாரணத்துக்கு ஜன்-தன் திட்டத்தின் கீழ் ஓபன் செய்யப்பட்ட நிறைய அகௌண்ட்ஸ் தற்போது டார்மண்ட் ஆக இருக்கின்றன. அது தவிர, சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் கீழ் மட்ட ஊழல் வழக்கு உள்ளது. பல இடங்களில் ஏழை மக்களின் பெயரில் ஓபன் செய்யப்பட்ட அகௌண்ட்ஸை மற்றவர்கள் ஆப்பரேட் செய்து வருகின்றனர்.யாருக்காக சப்சிடி வழங்க படுகிறதோ அவர்களுக்கு அது எப்போதும் போய் சேருவதில்லை. அடிஷனலி, சில சமயங்களில் டார்கெட்டேட் பாப்புலேஷனுக்கு சப்சிடி கிடைத்தால் கூட அதை பயனாளர்கள் குடிப்பதிலும் கம்பளிங்கிலும் செலவழித்து விடுகிறார்கள். இந்த அனைத்து ப்ராப்ளம்சுக்கும் ஒரே தீர்வு, கவர்ன்மென்ட், டைரெக்டாக யாருக்கு சேர வேண்டுமோ அவர்களுக்கு பணத்தை வவுச்சர் மூலமாக இஷ்யூ செய்வது தான். இதன் மூலம் இடை தரகர்களை அவாய்ட் செய்ய முடியும். ​ஈ-ரூபி யூஸ் செய்வதற்கான நன்மைகள் நிறைய இருக்கின்றன. வாட்ஸ் மோர், கவர்ன்மென்டுக்கும் இதன் மூலம் நன்மை கிடைக்கும், இட் வில் ஹவ் கிரேட்டர் டேட்டா ட்ரான்ஸ்பெரன்சி அண்ட் அகௌண்ட்டபிலிட்டி ஃபார் இட்ஸ் சப்சிடி பேமன்ட்ஸ். ப்ளீஸ், முதலில் இதை புரிந்து கொள்ளுங்கள் ஈ -ரூபி இஸ் நாட் எ கிரிப்டோகரன்சி. இது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் ஒரு முறையாகும். ஈ-ரூபி அடாப்க்ஷன் கிரிப்டோகரன்சி ஆர்வலர்களுக்கு அதிக நம்பிக்கையை அளித்துள்ளது, இது விரைவான டிஜிட்டல் மயமாக்கலுக்கான சிறந்த படியாக இதைப் பார்க்கிறது. கிரிப்டோகரன்சி ஆர்வலர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், கவர்ன்மென்டின் இந்த நடவடிக்கை, கிரிப்டோகரன்ஸிகளுக்கு சாதகமான நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு முன்னோடியாகும் என்று நம்புகிறார்கள். பல மார்க்கெட் எக்ஸ்பெர்ட்ஸ், இது டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கிரிப்டோ-சொத்துக்கள் கோ எக்சிஸ்ட் செய்வதற்கான முதல் சப்ஸ்டேன்ஷியல் ஸ்டெப் ஆக இருக்கலாம் என்று நம்புகிறார்கள் . இந்தியாவில், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 14.7%ஆக உள்ளது, இது கடந்த இரண்டு தசாப்தங்களில் இல்லாத அதிகபட்சமாகும். ஈ-ரூபி கட்டண வவுச்சர்களை ஏற்றுக்கொள்வதன் மூலம், அரசாங்கம் அதிகளவில் டிஜிட்டல் பேமெண்ட்ஸை ஊக்குவிக்கிறது மற்றும் நாட்டில் கேஷ் டிபெண்டென்ஸ் ஐ குறைக்கிறது. ​இந்தியாவில் 19 கோடி வங்கி கணக்கில்லாத தனிநபர்களுக்கு நிதி அணுகலை விரிவுபடுத்துவதும், அவர்களை முறையான நிதி அமைப்புக்குள் கொண்டுவருவதுமே ஈ-ரூபி தொடங்குவதில் அரசாங்கத்தின் ஒரு முக்கிய குறிக்கோள். ஈ-ரூபி அடிப்படையில் வெல்ஃபேர் பேமண்ட்ஸ் கான ஒரு லோ காஸ்ட் சொல்யூஷன் ஆகும். இது பொருளாதாரத்தை மேலும் ஃபார்மலைஸ் செய்ய விரும்பும் அரசாங்கத்தின் ட்ரைவுக்கு அதிக பவரை வழங்கும். ஓகே ப்ரெண்ட்ஸ், ஈ-ரூபி யில் இன்றைக்கு இவ்வளவு தான். ஹௌஎவெர், பேமண்ட் ஸ்பேசில் லேட்டஸ்ட் ஆக நடப்பதை உங்களுக்கு தொடர்ந்து வழங்குவோம் என்பது எங்களுடைய ப்ராமிஸ். விடைபெறும் முன்பு ஒரு இம்பார்ட்டண்ட் விஷயம், இந்த போட்காஸ்ட் வெறும் எஜூகேஷனல் பர்போசஸ் காக மட்டுமே எடுக்க பட்டது, இன்வெஸ்ட்டரும் தங்களுடைய ரிசர்ச் ஐ கட்டாயம் செய்யவேண்டும். ​இதே மாதிரியான இன்ட்ரெஸ்டிங் போட்காஸ்ட்ஸை ஐ கேட்க யூட்யுப் மற்றும் அதர் சோஷியல் மீடியா செனல்ஸ் மூலம் எங்களை போலோ செய்யவும். அது வரை, குட்பை அண்ட் ஹாப்பி இன்வெஸ்டிங் . ​செக்யூரிட்டிஸ் மார்கெட்ஸில் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, இன்வெஸ்ட் செய்வதற்கு முன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். Investments in the securities markets are subject to market risks. Read all the related documents carefully before investing.