எஸ்ஐபி. (SIP) முதலீட்டை எவ்வாறு தொடங்குவது?

எஸ்.ஐ.பி. (SIP) முதலீடுகள் வசதி, நெகிழ்வுத்தன்மை, ரூபாய் செலவு சராசரி மற்றும் கூட்டு போன்ற பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. நீங்கள் ஒரு முறையான முதலீட்டுத் திட்டத்தை எவ்வாறு தொடங்கலாம் என்பதையும் அதன் நன்மைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் கண்டறிவோ

எஸ்.ஐ.பி. (SIP) என்றால் என்ன?

ஒரு முறையான முதலீட்டு திட்டம்) (எஸ்.ஐ.பி. (SIP)) என்பது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு மூலோபாயமாகும், இது தொடர்ச்சியான இடைவெளியில் ஒரு திட்டத்தில் சிறிய நிலையான தொகைகளை முதலீடு செய்வதை உள்ளடக்கியது. இந்த அணுகுமுறை குறிப்பாக சில்லறை முதலீட்டாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இது சந்தை நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் ஒழுங்கமைக்கப்பட்ட முதலீட்டை ஊக்குவிக்கிறது. எஸ்.ஐ.பி. (SIP) முதலீடுகள் ரூபாய் செலவு சராசரியின் நன்மையையும் வழங்குகின்றன. முதலீடு குறிப்பிட்ட காலம் முழுவதும் விரவியிருப்பதால், இது மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களின் கொள்முதல் செலவை சராசரியாகக் கொண்டு சந்தை ஏற்ற இறக்கத்தின் தாக்கத்தைக் குறைக்கிறது.

கூடுதலாக, எஸ்.ஐ.பி.(SIP)-கள் உங்கள் முதலீடுகளை தானியங்கி செய்வதற்கான வசதியை வழங்குகின்றன. இது சந்தையை நிர்ணயிக்கும் தொந்தரவின்றி தொடர்ந்து சேமித்து முதலீடு செய்வதை எளிதாக்குகிறது. காலப்போக்கில், இந்த தொடர்ச்சியான முதலீடுகள் ஒரு கணிசமான பெருந்தொகையாக சேகரிக்கப்படலாம், இது கூட்டு சக்தியால் (power of compounding) ஆதரிக்கப்படுகிறது.

இந்தியாவில் எஸ்.ஐ.பி. (SIP)-யில் எவ்வாறு முதலீடு செய்வது?

பின்வரும் படிநிலைகளை மேற்கொள்வதன் மூலம் ஏஞ்சல் ஒன் செயலியில் மியூச்சுவல் ஃபண்டு எஸ்.ஐ.பி. (SIP)-ஐ நீங்கள் எளிதாக தொடங்கலாம்:

  1. முகப்பு பக்கத்திற்கு சென்று ‘மியூச்சுவல் ஃபண்டுகள்’ மீது கிளிக் செய்யவும்.
  2. ‘மியூச்சுவல் ஃபண்டுகளை கண்டறியவும்’ என்ற தலைப்பில் இருந்து நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் நிதியை தேர்வு செய்யவும். ‘அனைத்து நிதிகளையும் காட்டு’ என்பதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தேடலை நீங்கள் தொடங்கலாம். கொடுக்கப்பட்ட நிதிகளின் வகைகளை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தேடலையும் நீங்கள் குறைக்கலாம்.
  3. நீங்கள் ஒரு மியூச்சுவல் ஃபண்டின் விவரங்களை சரிபார்த்து அதை தேர்ந்தெடுத்தவுடன், ‘முதலீடு’ மீது கிளிக் செய்யவும்.
  4. எஸ்.ஐ.பி.(SIP) விருப்பத்தை தேர்வு செய்து, மாதாந்திர தொகை மற்றும் தேதியை உள்ளிடவும், அதாவது உங்கள் கணக்கிலிருந்து எஸ்.ஐ.பி.(SIP) பணம்செலுத்தல்கள் செய்யப்படும் குறிப்பிட்ட மாதத்தின் நாள்.
  5. பணம்செலுத்தல் முறையை தேர்வு செய்யவும், எடுத்துக்காட்டாக, யூ.பி.ஐ. (UPI).
  6. எஸ்.ஐ.பி. (SIP) செயல்முறையைத் தொடங்க ‘எஸ்.ஐ.பி. (SIP)-ஐ தொடங்கவும்’ மீது கிளிக் செய்யவும்.
  7. நீங்கள் உங்கள் முதல் எஸ்.ஐ.பி. (SIP) பணம்செலுத்தலை உடனடியாக செலுத்த தேர்வு செய்யலாம் ‘இப்போது முதல் எஸ்.ஐ.பி.(SIP) பணம்செலுத்தலை செய்யுங்கள்’

எஸ்.ஐ.பி.(SIP)-யில் முதலீடு செய்வதற்கு முன்னர் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

ஒரு முறையான முதலீட்டு திட்டத்தை தொடங்குவதற்கு முன்னர், பல முக்கியமான அம்சங்களை கருத்தில் கொண்டு தகவலறிந்த முதலீட்டு முடிவுகளை எடுப்பது அவசியமாகும். இந்த புள்ளிகளில் பின்வருபவை அடங்கும்:

  • உங்கள் நிதி இலக்குகள்

ஒரு நோக்கம் இல்லாமல் முதலீடு செய்வது ஒரு மோசமான நிதித் தவறு ஆகும்; அதிலிருந்து மீள்வது சவாலாக இருக்கும். எனவே, ஒரு நோக்கம் இல்லாமல் முதலீடு செய்வதற்கு பதிலாக, உங்கள் ஒட்டுமொத்த நிதி இலக்குகளுடன் உங்கள் எஸ்.ஐ.பி.(SIP) முதலீடுகளை நீங்கள் ஒருங்கிணைக்க வேண்டும்.

  • உங்கள் ரிஸ்க் அப்பிடைட் (Risk Appetite)

உங்களுக்கு வசதியான ஆபத்து நிலையை நீங்கள் அடையாளம் காண வேண்டும். சிறிய-கேப் நிதிகள் அல்லது வளர்ந்து வரும் சந்தைகள் போன்ற சில வகையான ஈக்விட்டி நிதிகளில் உள்ள எஸ்.ஐ.பி.(SIP)-கள், குறியீட்டு நிதிகள் மற்றும் பெரிய-கேப் நிதிகள் போன்றவை மற்றவற்றை விட அதிக ஆபத்தை கொண்டிருக்கலாம்.

  • உங்கள் முதலீட்டு காலம்

குறுகிய கால, நடுத்தர கால அல்லது நீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டுமா என்பதை முடிவு செய்யவும். உங்கள் முதலீட்டு வரம்பு உங்கள் நிதி இலக்குகளைப் பொறுத்தது. இது நீங்கள் எஸ்.ஐ.பி. (SIP)-களில் முதலீடு செய்யும் காலத்தை நேரடியாக பாதிக்கிறது.

  • சாத்தியமான எஸ்.ஐ.பி.(SIP) ரிட்டர்ன்கள்

நீங்கள் ஒரு எஸ்.ஐ.பி. (SIP)-ஐ தொடங்குவதற்கு முன்னர் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் உங்கள் முதலீட்டில் இருந்து கிடைக்கும் சாத்தியமான வருமானமாகும். வருமானங்கள் குறித்து மேலும் தெளிவு பெற மற்றும் காலப்போக்கில் உங்கள் முதலீடுகள் எவ்வாறு அதிகரிக்கும் என்பதை புரிந்துகொள்ள நீங்கள் ஒரு எஸ்.ஐ.பி.(SIP) கால்குலேட்டரை பயன்படுத்தலாம்.

  • வரி தாக்கங்கள்

உங்கள் எஸ்.ஐ.பி. (SIP) முதலீடுகளின் வரி தாக்கங்களையும் நீங்கள் மதிப்பீடு செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் முதலீடுகளை ரெடீம் செய்து உங்கள் மியூச்சுவல் ஃபண்டு யூனிட்களை விற்கும்போது, இது நடைமுறைக்கு வரும். ஈக்விட்டி நிதிகளுக்கான வரிவிதிப்பு கடன் நிதிகளில் இருந்து வேறுபடுகிறது.

எஸ்.ஐ.பி.(SIP) இலக்குகளை எவ்வாறு அமைப்பது?

எஸ்.ஐ.பி.(SIP) இலக்குகளை அமைப்பது ஒரு சிஸ்டமேட்டிக் முதலீட்டு திட்டம் வழியாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான முக்கிய பகுதியாகும். உங்கள் எஸ்.ஐ.பி.(SIP) முதலீடுகளுக்கு நன்கு தெரிவிக்கப்பட்ட மற்றும் நடைமுறை இலக்குகளை அமைக்க, நீங்கள் செய்ய வேண்டியது கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

1. இறுதி இலக்கை வரையறுத்தல்

உங்கள் எஸ்.ஐ.பி.(SIP) முதலீடுகளின் நோக்கத்தை கண்டறிந்து கொண்டு தொடங்குங்கள். இது ஓய்வு காலம், வீடு வாங்குதல், உங்கள் குழந்தையின் கல்வி அல்லது வேறு ஏதேனும் நோக்கங்களுக்கு நிதியளித்தல் போன்றதாக இருக்கலாம். இந்த இலக்குகள் என்ன என்பதையும், அவற்றை நீங்கள் எப்போது அடைய விரும்புகிறீர்கள் என்பதையும் பற்றி தெளிவாக இருங்கள். 2. உங்கள் முதலீட்டு வரம்பை அமையுங்கள்

ஒவ்வொரு இலக்கும் வெவ்வேறு கால வரம்புடன் வருகிறது. குறுகிய கால இலக்குகள் 1முதல்3 ஆண்டுகள் வரை இருக்கலாம், நடுத்தர கால இலக்குகள் 3 முதல்10 ஆண்டுகள் வரை இருக்கலாம், நீண்ட கால இலக்குகள் பத்து வருடங்களுக்கும் மேலாக இருக்கலாம். இந்த காலக்கெடு உங்கள் எஸ்.ஐ.பி.(SIP) முதலீட்டு மூலோபாயத்தை பாதிக்கும்.

3. உங்கள் ஆபத்து திறனை புரிந்து கொள்ளுங்கள்

எஸ்.ஐ.பி.(SIP)-களில் நீங்கள் எவ்வளவு அதிகமாக முதலீடு செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் உங்கள் ஆபத்து சகிப்புத்தன்மை முக்கியமானது. நீங்கள் ஆபத்தை விரும்பவில்லை என்றால், நீங்கள் டெப்ட் ஃபண்டுகள் அல்லது இண்டெக்ஸ் ஃபண்டுகளை விரும்பலாம். எவ்வாறெனினும், அதிக ஆபத்து சகிப்புத்தன்மை, ஈக்விட்டி நிதிகளில் ஒரு எஸ்.ஐ.பி.(SIP)-ஐ தொடங்குவதை எளிதாக்கும்.

4. சரியான மியூச்சுவல் ஃபண்டுகளை தேர்வு செய்தல்

சரியான நிதிகளை தேர்வு செய்வது எஸ்.ஐ.பி.(SIP) இலக்குகளை அமைப்பதற்கான ஒரு அத்தியாவசிய பகுதியாகும். பொதுவாக, நீங்கள் தேர்வு செய்யும் நிதி உங்களுக்கு விருப்பமான ஆபத்து நிலைகளுடன் இணைக்க வேண்டும், நிர்வாகத்தின் கீழ் குறிப்பிடத்தக்க சொத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும், ஒரு திறமையான தொழில்முறையாளரால் நிர்வகிக்கப்பட வேண்டும் மற்றும் ஒரு புகழ்பெற்ற ஏ.எம்.சி.(AMC)-க்குக் கீழ் இருக்க வேண்டும்.

5. எஸ்.ஐ.பி.(SIP) தொகையை தீர்மானித்தல்

கடைசியாக, உங்கள் நிதி இலக்குகளை அடைய எஸ்.ஐ.பி.(SIP) வழியாக நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய தொகையை தீர்மானிக்க வேண்டும். ஒரு எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டர் இதற்கு உங்களுக்கு உதவும். கொடுக்கப்பட்ட வருவாய் விகிதத்தில் கொடுக்கப்பட்ட முதலீட்டுக் காலத்தில் உங்கள் முதலீடு எவ்வாறு அதிகரிக்கும் என்பதை இது காட்டுகிறது.

ஒரு எஸ்.ஐ.பி. (SIP) முதலீட்டின் விளக்கமான எடுத்துக்காட்டு

உங்கள் சம்பளமாக ஒரு மாதத்திற்கு ₹80,000 சம்பாதிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், மற்றும் உங்களுக்கு விருப்பமான மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி.(SIP)-யில் முதலீடு செய்ய உங்கள் மாதாந்திர சம்பளத்தில் 10% ஐ பயன்படுத்த முடிவு செய்கிறீர்கள். நீங்கள் ஒரு ஆட்டோ-டெபிட் மேண்டேட்டை அமைக்கிறீர்கள், மற்றும் தேவையான தொகை தானாகவே உங்கள் சம்பள கணக்கிலிருந்து கழிக்கப்பட்டு ஒரு சிஸ்டமேட்டிக் முதலீட்டு திட்டம் வழியாக உங்களுக்கு விருப்பமான நிதியில் முதலீடு செய்யப்படுகிறது.

நிதி பெயர் வகை 3-ஆண்டு சி.ஏ.ஜி.ஆர். (CAGR) 5-ஆண்டு சி.ஏ.ஜி.ஆர். (CAGR) ஏ.யு.எம். (AUM) (₹ கோடியில்) செலவு விகிதம்
ஐசிஐசிஐ ப்ரூ ஓவர்நைட் ஃபண்ட் ஓவர் நைட் ஃபண்ட் 126.01% 65.97% 10,373.88 0.10
குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் 45.13% 34.79% 13,001.83 0.77
பேங்க் ஆஃப் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் 34.40% 32.71% 819.51 0.88
குவாண்ட் உள்கட்டமைப்பு ஃபண்ட் துறைசார் நிதி – உள்கட்டமைப்பு 39.72% 32.67% 1,321.56 0.77
குவாண்ட் இ.எல்.எஸ்.எஸ். வரி சேமிப்பு ஃபண்ட் ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டம் 32.42% 31.16% 6,416.22 0.76
நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் 40.44% 29.92% 43,815.61 0.67
குவாண்ட் மிட் கேப் ஃபண்ட் மிட் கேப் ஃபண்ட் 35.10% 29.63% 3,781.48 0.76
குவாண்ட் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் 32.45% 28.45% 2,457.78 0.77
ஆக்சிஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் 30.70% 28.23% 18,615.72 0.55
ஐசிஐசிஐ ப்ரூ ஸ்மால்கேப் ஃபண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் 33.76% 28.16% 7,091.81 0.66

எனவே, ஒவ்வொரு மாதமும், 20 ஆண்டுகளுக்கு உங்கள் எஸ்.ஐ.பி.(SIP) முதலீடுகளுக்கு நீங்கள் ₹8,000 என பங்களிக்கிறீர்கள். இந்த காலகட்ட முடிவில், நீங்கள் ஆண்டுதோறும் ரூ ₹96,000 முதலீடு செய்திருப்பீர்கள், மொத்த முதலீட்டு மூலதனம் ரூ ₹19,20,000. ஆக இருக்கும்.

இந்த காலகட்டத்தில், நீங்கள் முதலீடு செய்த மியூச்சுவல் ஃபண்டு ஆண்டுக்கு 12% வட்டி விகிதத்தில் வருமானத்தில் இருந்தால், உங்கள் முதலீடு ₹.79,93,183 ஆக வளர்ந்திருக்கும். இது ₹.60,73,183 (அதாவது. ₹.79,93,183 மைனஸ் ₹.19,20,000).

நீங்கள் ஒரு எஸ்.ஐ.பி.(SIP)-யில் முதலீடு செய்வதற்கு முன்னர் எஸ்.ஐ.பி.(SIP) கால்குலேட்டருடன் உங்கள் எஸ்.ஐ.பி.(SIP) முதலீடுகளிலிருந்து சாத்தியமான வருவாயையும் நீங்கள் கணக்கிடலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் மாதாந்திர முதலீட்டின் விவரங்கள், ஆண்டுக்கு எதிர்பார்க்கப்படும் வருமான விகிதம் மற்றும் முதலீட்டு காலம் ஆகியவற்றை உள்ளிட வேண்டும். இந்த இலவச ஆன்லைன் கருவியானது, பின்னர் மூலதன அதிகரிப்பு மற்றும் உங்கள் எஸ்.ஐ.பி.(SIP) முதலீடுகளிலிருந்து மதிப்பிடப்பட்ட ஆதாயங்கள் அல்லது வருவாய்களுக்கு பிறகு உங்கள் கார்பஸின் மொத்த மதிப்பை கணக்கிடும்.

2024-ல் கருத்தில் கொள்ள வேண்டிய சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகள்

குறிப்பு: மேலே உள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள நிதிகள் ஜனவரி 18, 2024 வியாழனன்று அவற்றின் மதிப்புகளை பிரதிபலிக்கின்றன.

பொறுப்புத் துறப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் இவை முதலீட்டு பரிந்துரைகள் அல்ல. இந்த நிதிகள் 5 ஆண்டு சி.ஏ.ஜி.ஆர்.(CAGR)அடிப்படையில் உள்ளன, இது அடிக்கடி மாற்றத்திற்கு உட்பட்டது. நிதி பற்றிய மேலும் விவரங்கள் மற்றும் நிகழ்நேர தகவல்களுக்கு, ஏஞ்சல் ஒன்ஐஅணுகவும்.

எஸ்.ஐ.பி.(SIP)-யில் முதலீடு செய்வதன் நன்மைகள்

எஸ்.ஐ.பி.(SIP) முதலீடுகள் பின்வருவன போன்ற பல நன்மைகளை வழங்குகின்றன:

  • ஒழுங்குமுறை சேமிப்பு

எஸ்.ஐ.பி.(SIP)-கள் தொடர்ச்சியான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முதலீட்டை ஊக்குவிக்கின்றன, இது நீண்ட கால நிதி திட்டமிடலுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  • ரூபாய் செலவு சராசரி

ஒரு நிலையான தொகையை வழக்கமாக முதலீடு செய்வதன் மூலம், விலைகள் குறைவாக இருக்கும் போது நீங்கள் அதிக யூனிட்களை வாங்குகிறீர்கள் மற்றும் விலைகள் அதிகமாக இருக்கும் போது குறைவாக வாங்குகிறீர்கள். காலப்போக்கில் இது ஒரு யூனிட்டிற்கு குறைந்த சராசரி செலவிற்கு வழிவகுக்கும்.

  • கூட்டு சக்தி 

எஸ்.ஐ.பி. (SIP)-கள் வழியாக தொடர்ச்சியாக செய்யப்படும் சிறிய முதலீடுகள் கூட்டு விளைவின் காரணமாக காலப்போக்கில் கணிசமாக வளரக்கூடும்.

  • வசதி மற்றும் நெகிழ்வுத்தன்மை

ஒரு எஸ்.ஐ.பி.(SIP)-ஐ தொடங்குவது மற்றும் நிர்வகிப்பது எளிதானது. பெரும்பாலும், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து தானியங்கி விலக்குகளுக்கு ஒரு முறை மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.

  • எந்தவொரு சந்தை நிலைக்கும் பொருத்தமானது

முறையான முதலீட்டுத் திட்டங்கள் சந்தை ஏற்ற இறக்கத்தின் தாக்கத்தைக் குறைக்கின்றன. இது அனைத்து வகையான சந்தை நிலைமைகளுக்கும் பொருத்தமானதாக ஆக்குகிறது.

  • நீண்ட-கால செல்வ உருவாக்கம்

நீண்ட கால முதலீட்டு வரம்பு கொண்ட முதலீட்டாளர்களுக்கு, கணிசமான செல்வக் குவிப்பை ஆதரிக்கும் திறனை எஸ்.ஐ.பி.(SIP) கொண்டுள்ளது. இது திட்டமிட்டபடி பெரும் நிதி இலக்குகளை அடைய உதவுகிறது.

உங்கள் எஸ்.ஐ.பி.(SIP) ரிட்டர்ன்களை எவ்வாறு கணக்கிடுவது

உங்கள் சிஸ்டமேட்டிக் முதலீட்டு திட்டத்தின் வருமானங்களை கணக்கிடுவது உங்கள் தொடர்ச்சியான முதலீடுகள் காலப்போக்கில் எவ்வாறு வளரும் என்பதை புரிந்துகொள்வதை உள்ளடக்குகிறது. எஸ்.ஐ.பி. (SIP) வருவாய்களை மதிப்பிடுவதற்கான ஒரு பொதுவான முறை என்னவென்றால் கூட்டு வட்டிக்கான ஃபார்முலாவைப் பயன்படுத்துவது, உங்கள் முதலீடுகளின் ஃப்ரீக்வென்சி மற்றும் தொகை, எஸ்.ஐ.பி.(SIP)-யின் காலம் மற்றும் எதிர்பார்க்கப்படும் வருவாய் விகிதத்தை கருத்தில் கொள்வதாகும்.

இந்த செயல்முறையை எளிமைப்படுத்த, பல ஆன்லைன் எஸ்.ஐ.பி.(SIP) கால்குலேட்டர்கள் கிடைக்கின்றன. நீங்கள் மாதாந்திர முதலீட்டு தொகை, முதலீட்டின் காலம் மற்றும் எதிர்பார்க்கப்படும் வருடாந்திர வருவாய் விகிதம் ஆகியவற்றை மட்டுமே உள்ளிட வேண்டும். இந்த கால்குலேட்டர்கள் பின்னர் உங்கள் முதலீட்டின் மதிப்பிடப்பட்ட எதிர்கால மதிப்பை வழங்க கூட்டு வட்டி ஃபார்முலாவை பயன்படுத்துகின்றன.

உதாரணமாக, நீங்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு எஸ்.ஐ.பி.(SIP)-யில் ₹.10,000 முதலீடு செய்தால், மற்றும் 14% வருடாந்திர வருமான விகிதத்தை எதிர்பார்த்தால், நீங்கள் இந்த மதிப்புகளை எஸ்.ஐ.பி.(SIP) கால்குலேட்டரில் உள்ளிடலாம். ஆன்லைன் கருவி பின்னர் உங்கள் எஸ்.ஐ.பி.(SIP) முதலீடுகளிலிருந்து நீங்கள் சம்பாதிக்கக்கூடிய மொத்த வருமானத்தையும் உங்கள் கார்பஸ் வளர்ச்சியடையக்கூடிய தொகையையும் காண்பிக்கும்.

முடிவுரை

நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய தொடங்க விரும்புகிறீர்கள், ஆனால் உடனடியாக ஒரு மொத்த தொகை கிடைக்கவில்லை என்றால், ஒரு சிஸ்டமேட்டிக் முதலீட்டு திட்டம் என்பது எந்தவொரு தாமதமும் இல்லாமல் உங்கள் முதலீட்டு பயணத்தை தொடங்குவதை சாத்தியமாக்குகிறது. அவ்வப்போது சிறிய தொகைகளை முதலீடு செய்வதன் மூலம், ரூபாய் செலவு சராசரி மற்றும் கூட்டு நன்மையின் நன்மையையும் நீங்கள் பெறுவீர்கள்.

காலப்போக்கில், உங்கள் வருமானம் வளரும் போது, நீங்கள் எஸ்.ஐ.பி.(SIP)-களில் முதலீடு செய்யும் தொகையை அதிகரிக்கலாம் மற்றும் பல்வேறு சொத்துக்கள் மற்றும் சொத்து வகுப்புகளில் உங்கள் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்தலாம். இது உங்கள் போர்ட்ஃபோலியோவிற்கான ஒட்டுமொத்த ஆபத்தை குறைக்கிறது மற்றும் உங்கள் ஆபத்து-சரிசெய்யப்பட்ட வருமானத்தை மேம்படுத்த உதவுகிறது. உங்கள் எஸ்.ஐ.பி. (SIP) முதலீடுகள் உங்கள் நிதி இலக்குகளுடன் ஒத்துப்போவதை உறுதி செய்வது முக்கியமாகும், எனவே நீங்கள் திட்டமிட்டபடி ஒவ்வொரு நிதி மைல்கல்லையும் அடையலாம்.

FAQs

நான் எஸ்.ஐ.பி.(SIP)-யில் தினசரி ₹100 முதலீடு செய்ய முடியுமா?

ஆம், நீங்கள் குறைந்தபட்சம் ₹100 கொண்டு எஸ்.ஐ.பி.(SIP) முதலீடுகளை செய்யலாம். பல மியூச்சுவல் ஃபண்டு ஹவுஸ்கள் ₹100 அமைக்கப்பட்ட குறைந்தபட்ச எஸ்.ஐ.பி.(SIP) தொகையுடன் முதலீட்டு திட்டங்களை வழங்குகின்றன. இருப்பினும், சாத்தியமான மூலதன மதிப்பீட்டை அனுபவிக்க நீங்கள் நீண்ட காலமாக இத்தகைய நிதிகளில் முதலீடு செய்யப்பட வேண்டும்.

நான் எப்போது வேண்டுமானாலும் எஸ்.ஐ.பி.(SIP)-ஐ வித்ட்ரா செய்ய முடியுமா?

ஆம், நீங்கள் ஒரு ஓபன்-எண்டட் மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் எந்த நேரத்திலும் உங்கள் எஸ்.ஐ.பி.(SIP) முதலீடுகளை வித்ட்ரா செய்யலாம். உங்கள் முதலீடுகளை வித்ட்ரா செய்வது பொதுவாக அறிவுறுத்தப்படவில்லை என்றாலும், உங்களுக்கு அவசரமாக நிதி தேவைப்பட்டால் அல்லது நிதி குறைவாக செயல்பட்டால் இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.

எஸ்.ஐ.பி.(SIP)-யில் நான் எவ்வாறு முதலீடு செய்ய தொடங்குவது?

ஒரு சிஸ்டமேட்டிக் முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்ய தொடங்க, நீங்கள் முதலில் அதனை ஆய்ந்து, உங்கள் முதலீட்டு இலக்குகளுடன் இணைக்கும் ஒரு மியூச்சுவல் ஃபண்டை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், முதலீட்டு தொகை மற்றும் ஃப்ரீக்வென்சியை தீர்மானிக்கவும். இறுதியாக, ஒரு மியூச்சுவல் ஃபண்டு ஹவுஸ் அல்லது ஒரு முதலீட்டு தளத்தை தேர்ந்தெடுக்கவும், தேவையான ஆவணங்களை நிறைவு செய்து உங்கள் எஸ்.ஐ.பி.(SIP)-ஐ தொடங்குங்கள்.

நான் நேரடியாக ஒரு எஸ்.ஐ.பி.(SIP)-ஐ எவ்வாறு தொடங்குவது?

ஒரு எஸ்.ஐ.பி.(SIP)-ஐ நேரடியாக தொடங்க, உங்கள் இலக்குகளை பூர்த்தி செய்யும் மியூச்சுவல் ஃபண்டை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், நிதி நிறுவனத்தின் இணையதளம் அல்லது முதலீட்டு தளத்தில் பதிவு செய்யவும், விண்ணப்ப படிவம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து முதலீடு செய்ய கே.ஒய்.சி. (KYC) செயல்முறையை நிறைவு செய்யவும்.