What happens to my money when I die

Podcast Duration: 7:31
நான் இறந்து விட்டால் என் பணம் என்னவாகும்? ​ஹலோ, பிரெண்ட்ஸ், ஏஞ்சல் ஒன் னின் இன்னும் ஒரு சூப்பர் இன்ஃபோர்மேடிவ் போட்காஸ்ட் இல் உங்களை வரவேற்கிறேன். ​பிரெண்ட்ஸ், இன்று நாம் ஒரு சென்சிடிவ் எட் வெரி இம்பார்ட்டண்ட் டாபிக்கில் பேச போகிறோம் இது உங்களுக்கும் உங்கள் பேமிலி மெம்பெர்ஸ்க்கும் மிகவும் முக்கியமான பெரிய விளைவுகளை ஏற்படுத்த கூடியது. ​நீங்கள் இல்லாவிட்டால் உங்கள் பணம் மற்றும் உங்கள் இன்வெஸ்ட்மெண்ட்ஸ்க்கு என்ன நடக்கும் என்பதை பற்றி இன்று நாம் பேச போகிறோம். ​ஐ அக்ரீ, இது யாருமே விருப்பத்துடன் பேச விரும்பும் ஒரு டாபிக் கிடையாது, ஆனால் உங்கள் மரணத்துக்கு பிறகு உங்கள் குடும்பத்தின் அதே வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாப்பது பைனான்சியல் பிளானிங்கின் ஒரு முக்கிய பகுதியாகும். இது நம் அன்புக்குரியவர்களுக்கு இனிமையான நினைவுகளை விட்டுவிட்டு, அவர்களுடன் நாம் இல்லாவிட்டாலும், அவர்கள் மீது நமக்கு இருக்கும் அக்கறையை அவர்களுக்கு தெரியப்படுத்துவதற்கான ஒரு வழியாகும். வாட்ஸ் மோர், பண்டமிக் காலத்தில் இதை பற்றி பேசுவதற்கும், இதுபோன்ற நிகழ்வுகளுக்குத் தயாராவது இன்ஷ்யூர்ஸ் தட் யுவர் பேமிலி இஸ் நாட் லெஃப்ட் டு தி விம்ஸ் அண்ட் பான்சிஸ் ஆஃப் ஃபேட் ஆர் அதர் பேமிலி மெம்பெர்ஸ். ​ ஓகே, வித்தவுட் ஃபர்த்தர் அடு, லெட்ஸ் டிக் இன். ஒரு நபரின் மரணத்தின் போது, அவரது சொத்துக்கள் வாரிசுகளுக்கு அல்லது அவரது விருப்பப்படி பெயரிடப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்படும். ஒரு நபர் உயிலை உருவாக்காமல் இறந்து விட்டால், அவர் அல்லது அவள் இன்டெஸ்டேட் இறந்து விட்டதாக கருத படுகிறது. ​நீங்கள் ஒரு இந்துவாக இருந்தால், உங்கள் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் உங்களுடைய வாரிசுகளுக்கு இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 -ன் படி பிரித்து கொடுக்கப்படும்.. நீங்கள் ஒரு முஸ்லீம் என்றால், உங்கள் வாரிசு முஸ்லிம் முஸ்லீம் பர்சனல் லா படி தீர்மானிக்க படும். ​இந்தியாவில் உயில் டிராஃப்ட் செய்யவேண்டிய முக்கியத்துவத்தை இங்கே சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம். இந்தியாவில், இந்து வாரிசு சட்டம் அல்லது இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின்படியே ஒரு உயில் டிராஃப்ட் செய்ய பட வேண்டும். உயிலில் நீங்கள் மற்றும் இன்னும் இரண்டு சாட்சியாளர்கள் கையெழுத்திட வேண்டியது அவசியம். ஆனால் உயிலை ரெஜிஸ்டர் செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஹௌஎவெர், ரெஜிஸ்டர் செய்வதன் மூலம் அது சட்டத்தில் செல்லுபடியாகும் வாய்ப்புகள் அதிகமாகிறது. ​அஸ் எ ரூல், உயிலை எக்சிக்யூட் செய்வதற்கு ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும், அதாவது, அனைத்து ஃபோர்மாலிட்டீஸ் ஐ நிறைவேற்றுவதற்கும், அந்த நபரின் சொத்துக்கள் உயிலில் பெயரிட பட்டிருப்பவர்களுக்கு சரியாக பிரித்து கொடுப்பதை உறுதி செய்வதற்கும் அவர் பொறுப்பேற்க வேண்டும். ​ப்ரெண்ட்ஸ், இப்போது நாம் நாமினீ யின் இஷ்யூஸுக்கு வருவோம். இந்திய சட்டங்களின்படி, நாமினீ ஒரு பராமரிப்பாளராக இருக்க வேண்டும். ஒரு நாமினீ சட்ட வாரிசாக கூட இருக்கலாம் பட் ஒரு நாமினீ, சட்ட வாரிசாக தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. நாமினீ சட்டப்பூர்வ வாரிசாக இல்லாதிருந்தால், உங்கள் முதலீடுகளை ஒரு மைனர் சட்டப்பூர்வ வாரிசுக்காக நம்பிக்கையுடன் பாதுகாத்து வருவதும், தன்னுடைய சொந்த நலனுக்காக அதை உபயோகிக்காமல் இருப்பதும் அவருடைய பொறுப்பாகும். ஒரு நாமினீ நியமிக்க பட்டுள்ளார் என்றால், அந்த வழக்கில், உங்களின் குடும்ப உறுப்பினர்கள் அதிகாரிகளுக்கு வெறும் ஒரு டெத் செர்டிபிகேட் கொடுத்தால் போதும். சில சந்தர்ப்பங்களில், அதிகாரிகள் லெட்டர் ஆஃப் இன்டெம்னிட்டியையும் கேட்கலாம். நாமினேஷன் இல்லை என்றால், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உள்ளூர் தாசில்தாரிடமிருந்து ஒரு சக்சேஷன் லெட்டரை பெற வேண்டும். ப்ரெண்ட்ஸ், இப்போது நாம் ஸ்டாக்ஸ் அண்ட் ஷேர்ஸ் ஐ பற்றி பேசலாம். உங்கள் மரணத்திற்கு பிறகு, உங்களுடைய எல்லா ஷேர்ஸையும் நாமினீக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்ய முடியும். உங்கள் வேட்பாளர் செய்ய வேண்டியது, ஒரு நாமினீ செய்ய வேண்டியதெல்லாம் நோட்டரி அல்லது கெஜட்டட் அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட இறப்புச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் ப்ரோக்கரேஜ் ஹௌசுடன், நீங்கள் நாமினீயை ரெஜிஸ்டர் செய்யவில்லை என்றால் இன்றே நாமினீயை ரெஜிஸ்டர் செய்து கொள்ளவும். ​நாமினேஷன் ரெஜிஸ்டர் செய்யப்படவில்லை என்றால்,உ ங்கள் சட்டப்பூர்வ வாரிசுகள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும், அவர்கள் உங்கள் சட்டப்பூர்வ வாரிசுகள் என்பதை நிரூபிக்க அவர்கள், உயில், சக்சேஷன் செர்டிபிகேட் அல்லது லெட்டர் ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷனை சமர்ப்பிக்க வேண்டும். இப்போது, பேச போகிறோம் மியூச்சுவல் ஃபண்ட்ஸை பற்றி. டிரான்ஸ்மிஷன் எனப்படும் செயல்முறை மூலம் உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் ஹோல்டிங்ஸ் உங்கள் நாமினீசுக்கு அனுப்பப்படுகிறது. உங்கள் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் வேலிட் நாமினேஷன் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை இன்றே உறுதி செய்து கொள்ளவும். உங்கள் மரணத்துக்கு பிறகு, உங்கள் சட்டப்பூர்வ வாரிசுகள் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் யூனிட்சை மாற்றக் கோரி ஒரு கடிதம் எழுத வேண்டும். அவர்கள் இறப்பு சான்றிதழ் நகல், மியூச்சுவல் ஃபண்ட்ஸ் யூனிட்ஸ் மாற்றப்பட வேண்டிய நபரின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ஒரு கேஒய்சி ஐ உறுதிப்படுத்தல் கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். நாமினீ ரெஜிஸ்டர் செய்யப்படவில்லை என்றால், உங்கள் சட்டப்பூர்வ வாரிசுகள் அதிக சிரமத்திற்கு உள்ளாகி அவற்றை பெறுவதற்கு முன் சக்சேஷன் செர்டிபிகேட் ஐ தயாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ​தங்கத்தைப் பொறுத்தவரை, அதை உயில் மூலம் எளிதாக பாஸ் ஆன் செய்ய முடியும். உயில் இல்லை என்றால், ஒரு சக்சேஷன் செர்டிபிகேட் தேவைப்படும். ஷேர்ஸின் அதே நடைமுறையைப் பின்பற்றி எலெக்ட்ரானிக் கோல்டை பாஸ் ஆன் செய்யலாம். உங்களிடம் ரியல் எஸ்டேட் ஹோல்ட்டிங்ஸ் இருந்தால், உங்கள் சொத்து வாரிசுகளுக்கு போய் சேருவதற்கு ஒரு உயில் அவசியம். உங்கள் சட்டப்பூர்வ வாரிசுகள், நிலப் பதிவுகளை மாற்ற உள்ளூர் நகராட்சி அதிகாரம் அல்லது தலாத்தியிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும், இதனால் உங்கள் சட்ட வாரிசின் பெயர் ரெக்கார்ட்ஸ் இல் ரிஃப்ளெக்ட் ஆகும். பிபிஎஃப் கேசில், உங்கள் ஃபண்ட் உங்கள் வாரிசுகளுக்கு கிடைக்க, அவர்கள் படிவம் ஜி யை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். நாமினேஷன் இருந்தால் உங்கள் சட்ட வாரிசுகள் சக்சேஷன் செர்டிஃபிகேட் ஐ சமர்ப்பிக்க வேண்டாம். எனினும் நீங்கள் நாமினேஷனை பதிவு செய்ய மறந்து விட்டால் உங்கள் சட்ட வாரிசுகள் ஃபண்டை மாற்றி கொள்ளுவதற்கு ஒரு சக்சேஷன் செர்டிஃபிகேட்டை பெற வேண்டும். கடைசியாக, லைஃப் இன்ஷ்யூரன்ஸில், நீங்கள் போன பிறகு உங்களுடைய நாமினீசுக்கு சம் அஷ்யூர்ட் கிடைக்கும். உதாரணத்துக்கு, நீங்கள் 1 கோடி ரூபாய் சம் அஷ்யூர்ட் க்கு லைஃப் இன்ஷ்யூரன்ஸ் வைத்துள்ளதாக கருதுவோம், நீங்கள் இறந்த பிறகும், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பைனான்சியல்லி ப்ரொடெக்ட் செய்ய படுவார்கள், மேலும் அவர்கள் ஒரு கோடி ரூபாய் பெறுவார்கள். ​பிரெண்ட்ஸ், இந்த போட்காஸ்டில் இருந்து சில இம்பார்ட்டண்ட் விஷயங்களை நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். உயில் ஒன்றை உருவாக்குவது மற்றும் உங்கள் பைனான்சியல் இன்ஸ்ட்ருமெண்ட்ஸில் நாமினீஸின் பெயரைப் பதிவு செய்வது மிக முக்கியமான விஷயம். இது மிகவும் அவசியம், நீங்கள் இறந்த பிறகு, உங்களுடைய பேமிலி மெம்பெர்ஸ் ஒவ்வொரு டாக்குமெண்டுக்காகவும் அங்கு இங்கு அலைய வேண்டியதில்லை. விடை பெறும் முன்பு ஒரு இம்பார்ட்டண்ட் விஷயம், இந்த போட்காஸ்ட் வெறும் எஜூகேஷனல் பர்போசஸ் காக மட்டுமே எடுக்க பட்டது, இன்வெஸ்ட்டரும் தங்களுடைய ரிசர்ச் ஐ கட்டாயம் செய்யவேண்டும். ​இதே மாதிரியான இன்ட்ரெஸ்டிங் போட்காஸ்ட்ஸை ஐ கேட்க யூட்யுப் மற்றும் அதர் சோஷியல் மீடியா செனல்ஸ் மூலம் எங்களை போலோ செய்யவும். அது வரை, குட்பை அண்ட் ஹாப்பி இன்வெஸ்டிங். செக்யூரிட்டிஸ் மார்கெட்ஸில் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, இன்வெஸ்ட் செய்வதற்கு முன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். Investments in the securities markets are subject to market risks. Read all the related documents carefully before investing.