மியூச்சுவல் ஃபண்டுகளில் 15*15*15 விதி என்ன?

மியூச்சுவல் ஃபண்டுகளில் 15*15*15 விதி: 15% வருமானத்தில் 15 ஆண்டுகளுக்கு மாதத்திற்கு ₹15,000 முதலீடு செய்யுங்கள், மற்றும் காலப்போக்கில் அதிக திறன் கொண்ட கூட்டு (compounding) அதை ₹1 கோடியாக மாற்றலாம்.

நாடு முழுவதிலும் உள்ள பெரும்பாலான மக்கள் கோடீஸ்வரராவதில் ஆர்வமாக உள்ளனர். அவர்கள் ஒரு நம்பிக்கைக்குரிய வாழ்க்கையை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றனர் அல்லது இலாபகரமான வணிகத்தை வளர்க்கின்றனர். ஆனால் மாதத்திற்கு ₹15,000 முதலீடு செய்வதன் மூலம் உங்கள் செல்வத்தின், முதல் கோடியை நீங்கள் உருவாக்க முடியும், அதற்கு என்ன செய்வது? நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள் அல்லவா?

மியூச்சுவல் ஃபண்டுகளின் 15*15*15 விதி அதை சாத்தியமாக்குகிறது. இது ஒரு எளிய ஃபார்முலா, 15% ஆண்டு வருமானத்தை வழங்கும் ஒரு சொத்தில் மாதத்திற்கு வெறும் ₹15,000 முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் ₹1 கோடி கார்பஸை அடையலாம் என்று பரிந்துரைக்கிறது. இது கம்பவுண்டிங் மந்திரம் பற்றிய ஒரு ஆற்றல் வாய்ந்த விளக்கமாகும்.

15*15*15 விதியை ஆழமாக ஆராய்வதற்கு முன்னர், கூட்டு (compounding) என்ற கருத்தை புரிந்துகொள்வதன் மூலம் தொடங்கலாம்.

காம்பௌண்டிங் என்றால் என்ன?

மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றிய விவாதங்கள் வரும் போது, ‘கூட்டு’ (காம்பௌண்டிங்’) என்ற சொல்லை அடிக்கடி கேட்பீர்கள்.. ஆனால் உண்மையில் இதன் பொருள் என்ன? சாதாரணமாகக் கூறினால், கூட்டு என்பது காலப்போக்கில் ஒரு சிறிய, தொடர்ச்சியான முதலீட்டை ஒரு குறிப்பிடத்தக்க தொகையாக மாற்றும் நிகழ்வு ஆகும்.

சாராம்சத்தில், உங்கள் பணத்தை உங்களுக்காக கடினமாக உழைப்பதற்கு கூட்டு என்பது உங்கள் சாதகமாகும். உங்கள் ஆரம்ப முதலீட்டு காலத்திற்குள் உங்கள் வருமானத்தை நீங்கள் மீண்டும் முதலீடு செய்யும்போது, கூட்டு ஆற்றல் தொடங்குகிறது, இது உங்கள் முதலீடுகளை மிகவும் மதிப்புமிக்கதாகவும், முக்கியமாக, அதிக லாபகரமானதாகவும் மாற்றுகிறது. இது சாத்தியமாகும்; ஏனெனில் ஒரு கூட்டு காலத்தில் சம்பாதித்த வருமானங்கள் அடுத்த காலத்தில் வட்டியை உருவாக்குகின்றன.

கூட்டு எப்படி வேலை செய்கிறது?

எடுத்துக்காட்டாக, 15% வருடாந்திர வருமானத்துடன் 15 ஆண்டுகளுக்கு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய நீங்கள் மாதத்திற்கு ₹15,000 எஸ்.ஐ.பி. (SIP)-ஐ உருவாக்கிவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

உங்கள் எஸ்.ஐ.பி. (SIP)அட்டவணை அடுத்த 15 ஆண்டுகளில் எவ்வாறு இருக்கும் என்பதை இங்கே காணுங்கள்:

ஆண்டுகள் முதலீடு செய்யப்பட்ட தொகை (₹-யில்) சம்பாதித்த வருமானங்கள் (₹-யில்) மொத்த முதலீடு (₹-யில்)
1வது ஆண்டு 1,80,000 15,317 1,95,317
3வது ஆண்டு 5,40,000 1,45,192 6,85,192
6வது ஆண்டு 10,80,000 6,76,793 17,56,793
9வது ஆண்டு 16,20,000 18,12,717 34,32,717
12வது ஆண்டு 21,60,000 38,93,769 60,53,769
15வது ஆண்டு 27,00,000 74,52,946 1,01,52,946

காம்பௌண்டிங்ரிட்டர்ன்கள் காலப்போக்கில் உங்கள் முதலீட்டை அதிகரிக்கின்றன. முதலீடு செய்வதற்கு முன்னர் உங்கள் நிதி இலக்குகள் மற்றும் ஆபத்து சகிப்புத்தன்மையை தெரிந்து கொள்வது அறிவுறுத்தப்படுகிறது.

ஏஞ்சல் ஒன் உடன் உங்கள் முதலீட்டு பயணத்தை நீங்கள் தொடங்கலாம். உங்கள் எஸ்.ஐ.பி. (SIP)-ஐ இன்றே தொடங்குங்கள்!

அதன் அடிப்படையில், கூட்டு என்பது முதலீட்டு மூலோபாயங்களின் அடித்தளமாகும், மற்றும் இது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது, உங்கள் நன்மைக்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒன்றாகும். ஆரம்பத்தில் தொடங்குவது, தொடர்ச்சியாக முதலீடு செய்வது, கூட்டு அதன் நிதியச் சாதனையை உங்களுக்காகச் செய்ய அனுமதிப்பது ஆகியவை முக்கியம் ஆகும்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் 15*15*15 விதி என்ன?

15*15*15 விதியைப் பயன்படுத்தி ஸ்மார்ட் முதலீட்டின் சக்தியைப் பற்றி தெரிந்து கொள்வோம்:

படிநிலை 1: ஆரம்ப முதலீடு

15% வருமான விகிதத்துடன் 15 ஆண்டுகளுக்கு மாதத்திற்கு ₹15,000 முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த முறைக்குப் பிறகு, உங்கள் மொத்த செல்வம் கணிசமான ₹1,01,52,946 ஆக வளரும், இது 1 கோடிக்கு மேல் இருக்கும்.

படிநிலை 2: காம்பௌண்டிங் மந்திரம்

இப்பொழுது காம்பௌண்டிங் கொள்கையைப் பயன்படுத்துவோம். நீங்கள் இதே வருமானத்தையும், இன்னும் 15 ஆண்டுகளுக்கு இதே போன்று பங்களிப்பைக் கடைப்பிடித்தால், உங்கள் நிதி வானத்தைத் தொடும்.

15*15*15 விதிகளுக்கு அப்பால்

நாம் அறிந்துள்ளபடி, காம்பௌண்டிங் என்பதன் ஆற்றல் வியப்பூட்டும் வருவாயைக் கொடுக்கிறது. ஆனால் 15*15*15 விதி என்ன செய்ய முடியும் என்பதை ஆராய வரம்புகளுக்கு அப்பால் செல்ல வேண்டும்!

ஆண்டுகள் முதலீடு செய்யப்பட்ட தொகை சம்பாதித்த வருமானங்கள் மொத்த முதலீடு
15 ஆண்டுகள் ₹27,00,000 ₹74,52,946 ₹1,01,52,946
30 ஆண்டுகள் ₹54,00,000 ₹9,97,47,309 ₹10,51,47,309
40 ஆண்டுகள் ₹72,00,000 ₹46,38,56,332 ₹47,10,56,332

மேலே உள்ள அட்டவணையில் இருந்து சில நுண்ணறிவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

  • எளிமையான சொற்களில், அடுத்த கூடுதல் 15 ஆண்டுகளுக்கு உங்கள் முதலீட்டுத் திட்டத்தை நீங்கள் தொடர்ந்தால். பின்னர், காம்பௌண்டிங் ஆற்றலானது மொத்த முதலீடு செய்யப்பட்ட தொகையை விட 19.5 மடங்கு வருமானத்தை வழங்கும், அதாவது ₹54,00,000.
  • ஆனால் மீண்டும், நீங்கள் ஓய்வு பெறும் வரை அதே மூலோபாயத்திற்காக தொடர்ந்து முதலீடு செய்தால், மேலும் 10 ஆண்டுகளுக்கு, உங்கள் முதலீட்டுத் தொகை உங்கள் மொத்த முதலீட்டிற்கும் 65 மடங்கு அதிகமாக வளரும், அதாவது ₹72,00,000.

இதுவே மியூச்சுவல் ஃபண்டுகளின் 15*15*15 விதியின் மந்திரம் ஆகும். இது அனைத்தும் புத்திசாலித்தனமான, தொடர்ச்சியான முதலீடு மற்றும் கூட்டுத் திறனை உங்கள் நிதி எதிர்காலத்திற்கு அற்புதமாகச் செய்ய அனுமதிப்பது பற்றியதாகும். எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்கள் நிதி இலக்குகளின் அடிப்படையில் உங்கள் முதலீட்டு தேவைகளை நீங்கள் எளிதாக தீர்மானிக்கலாம்.

15*15*15 விதி உண்மையில் வேலை செய்கிறதா?

15*15*15 விதிகளுடன் எஸ்.ஐ.பி. (SIP)-யில் முதலீடு செய்யும்போது, அதை நடக்க மூன்று அத்தியாவசிய காரணிகள் உள்ளன:

  1. ஆண்டுகளின் எண்ணிக்கை
  2. முதலீடு செய்யப்பட்ட தொகை, அல்லது எஸ்.ஐ.பி. (SIP) தொகை
  3. முதலீட்டின் மீதான வருமானம்

இங்கு முதல் இரண்டு காரணிகள் உங்களது முடிவு எடுப்பதை கட்டுப்படுத்துகின்றன. ஆனால் முதலீட்டின் மீதான வருமானம் என்று வரும்போது, 15 ஆண்டுகளில் சி.ஏ.ஜி.ஆர். (CAGR) 15% அடைவதற்கு நீங்கள் ஒரு சிறந்த முதலீட்டாளராக இருக்க வேண்டும். எல்லா வருடங்களுக்கும் மீண்டும் மீண்டும் செயல்படும் நிலையான விதி எதுவும் இல்லை என்பதை ஒருவர் நினைவில் கொள்ள வேண்டும். 15 ஆண்டு நீண்ட காலத்தில், பல மாற்றங்கள் ஏற்படலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள காரணிகள் தவிர, உங்கள் முதலீட்டில் உள்ள வருமானத்தை தீர்மானிக்கும் இரண்டு வெளிப்புற காரணிகள் உள்ளன.

  1. பணவீக்கம்: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா சராசரியாக 6.02% பணவீக்கத்தை கண்டுள்ளது. எனவே உங்கள் முதலீட்டில் 15% க்கும் அதிகமான வருமானத்தை நீங்கள் அடைந்தாலும் கூட. பணவீக்கம் உங்கள் வருமானத்தை பாதிக்கும் மற்றொரு காரணியாக இருக்கும்.
  2. முதலீடுகள் மீதான வரி: பொருந்தக்கூடிய வரி முதலீட்டின் வகையைப் பொறுத்தது. ஆனால் ₹1,01,52,946 முதலீடு 74,52,946 மூலதன ஆதாயத்துடன் திரும்பப் பெறப்படும் போது. பங்குகள் மற்றும் ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து இலாபங்கள் உருவாக்கப்பட்டால் நீண்ட கால மூலதன ஆதாய வரி 10% விகிதத்தில் பொருந்தும். நீங்கள் கடன் அல்லது பிற பத்திரங்களில் முதலீடு செய்தால், வருமான வரி வரம்பு விகிதத்தின் அடிப்படையில் இந்த வரி மதிப்பீடு செய்யப்படும்.

மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டு விதிகள் பற்றி மேலும் படிக்கவும்

இந்த கட்டுரை கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. மேற்கோள் காட்டப்பட்டுள்ள பத்திரங்கள் உதாரணங்கள்தான், பரிந்துரைகள் அல்ல.

FAQs

15x15x15 மியூச்சுவல் ஃபண்டு விதி என்றால் என்ன?

15x15x15 மியூச்சுவல் ஃபண்டு விதி என்பது முதலீட்டு காலத்தின் இறுதியில் ரூ. 15% ஆண்டு வட்டி விகிதத்துடன் 15 ஆண்டுகளுக்கு மாதத்திற்கு ரூ.15,000 முதலீடு செய்ய பரிந்துரைக்கும் ஒரு வழிகாட்டுதலாகும்.

15% வருடாந்திர வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறதா?

இல்லை, 15% ஆண்டு வருமானம் என்பது காம்பௌண்டிங்  ஆண்டு வளர்ச்சி விகிதத்தை (சி.ஏ.ஜி.ஆர். – CAGR) அடிப்படையாகக் கொண்ட ஒரு கருத்தாகும். உண்மையான வருமானம் ஏற்ற இறக்கமாக இருக்கலாம், மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை.

அனைத்து வகையான மியூச்சுவல் ஃபண்டுகளுக்கும் இந்த விதி பொருத்தமானதா?

இந்த விதி ஒரு எளிமைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் அனைத்து வகையான மியூச்சுவல் ஃபண்டுகளுக்கும் பொருத்தமாக இருக்காது. உங்கள் முதலீட்டு நோக்கங்கள், ஆபத்து சகிப்புத்தன்மை மற்றும் நீங்கள் ஆர்வமுள்ள குறிப்பிட்ட நிதியை கருத்தில் கொள்வது முக்கியமாகும்.

இந்த விதி சந்தை ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொள்கிறதா?

இந்த விதி தொடர்ந்து 15% சி.ஏ.ஜி.ஆர். (CAGR) எனக் கருதுகிறது, ஆனால் சந்தை வருமானம் நிலையற்றதாக இருக்கும். சந்தை ஏற்ற இறக்கங்களைப் பற்றி அறிந்து, அதற்கேற்ப உங்கள் எதிர்பார்ப்புகளை சரிசெய்வது அவசியமாகும்.